பக்கம்:தாய் மண்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 :

கொண்ட தெய்வத் தமிழின் பெருமையை அமுதிலும் இனிக்க விளக்கினுள். தமிழுக்கு அமுதென்று பேர்!” என்ற உண்மைத் தரிசனத்துக்கும் அவள் உரை செய்திான். “திேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் எனக் கனவுகண்ட புதுமைக் கவியின் இலட்சியத்தை அவள் எங்ஙனம் மறுப்பாள்?

அத்தனை தி மி ஷ ங் க ள க அவள் மெய்ம்மறந்து போதித்தாள்.

அத்தனே நிமிஷங்களும் மெய்ம்மறந்து கேட்டன. அத்தனை மாணவியர் உள்ளங்களும் தமிழ் உணர்வில் பொங்கித் திளைத்தன.

அவ்வகுப்பு முடிந்ததற்குக் கட்டியம் கூறியது மணி Gu irre.

பிரிவேளைகள் மாறின.

அடுத்து, அப்பர் தேவாரம், காரைக்கால் அம்மையார் சரிதம், ஆகு பெயர் விளக்கம், வித்துவான் தியாகராசச் செட்டியார் போன்ற பாடங்கள் அவளது நாவண்ணம். பெற்றன.

தமிழாசிரியையின் பாடப் போதிப்பு என்றால், மாணவியர் குழாமில் மிகுந்த நற்பெயர். அந்தப் பெயரின் பெருமையில் பங்குபெற்றுப் பெருமை கொள்வதென்பது அந்தப் பள்ளியின்-சாரதா பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி சரோஜினி மூர்த்திக்கு வழக்க மான ஒரு பண்பாகவே ஊறிவிட்டது. தமிழாசிரியை தமிழரசி என்றால் அந்தந்த வகுப்பு மாணவிகளிலே பெரும்பாலும் எல்லோருமே மகிழ்ச்சியோடும் ஆர்வத். தோடும் வகுப்புகளுக்கு வந்து விடுவார்கள். இந்த அதிசயம், தமிழரசிக்குக் கிடைத்திருக்கக்கூடிய நல்ல புகழுக்கு ஒரு உதாரணமாகும். வித்துவான் படிப்பு முடிந்து வேலை ஏற்று வருஷம் இரண்டுதான் ஆகிறது. அதற்குள் எவ்வளவோ நல்ல பெயர் சம்பாதித்துவிட்டாள். மதர் திலகவதி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/19&oldid=664000" இலிருந்து மீள்விக்கப்பட்டது