பக்கம்:தாய் மண்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

“அந்த நொண்டியைத் திருமணம் செய்துகொள்ளும் வலு: உனக்கு உண்மையிலேயே உண்டா!... பாவம், அந்த ஜவான். அவரை ஆசை காட்டி மேலும் மோசம் செய்ய வேண்டாம்!... நீ, கேவலம், சாதாரண மானுடப் பிறவி என்பதை நான் அறிவேன். நீயும் அறிந்து கொள்!...” என்ற அக்கடிதத்தின் வரிகள், அவளது மனச்சாட்சியில் பதிந்துவிட்ட சவுக்கடியின் வரித் தழும்புகளாக இப்போது தோன்றலாயின. சற்றுமுன் சேகரம் செய்திருந்த நெஞ்சுரம் இப்பொழுது அவளிடமிருந்து பிய்த்துக்கொண்டு ஓடிவிடத் துடித்தது என்பதை அவள் உணர்ந்தாள். “இந்தக் கடிதத்தைத் தயாரித்து அனுப்பிய உள்ளம், மோகன்தாஸின் தீர்ப்பை அறிந்தால்-அதன் மூலம் நான் ஆதரவற்றுப் போய்விட்ட கதியற்ற நிலையைக் கேள்விப்பட்டால்எவ்வளவு எக்காளமிட்டுக் கெக்கலிக் கொட்டிச் சிரிக்கும்!”... அன்றாெரு நாள், மோகன்தாஸின் தாய்நாட்டுப் பணிக் கென்று அவன் கழுத்தில் அவள் பூமாலை சூட்டிய காட்சியைப் பத்திரிகைப் படத்தில் சுட்டிக் காட்டி கேலி பேசிய குமாரி ஜலஜாவின் முகத்தில் அடித்தாற்போல அவள் சூளுரைத்த அந்த உளமார்ந்த பேச்சுக்களெல்லாம் இப்போது அர்த்த மற்றுப் போய்விட்டனவே!...

மீண்டும் கீழே வந்தாள். தமிழ்க் கடவுளின்முன் நின்று, கண்ணிரைச் சிதறவிடாமல் தொடுத்து, மாலை சூட்டினுள். அன்று வினை தீர்த்தானுக்குச் சூட்டப்பட்ட மாலையை எடுத்த தற்குப் பரிகாரமாகவா இப்போது மாலை தொடுத்தாள்?...

மீண்டும் ஜலஜாவின் ஞாபகம் வந்தது. “அவள் நாளைக்கு என்னிடம் வந்து, “உன் சவால் என்னவாயிற்று? என்று கேட்பாளல்லவா? அதற்கு நான் என்ன பதில் சொல் வேன்? அவள் கேட்காவிட்டால், மறுபடியும் ஒரு கடிதம் எழுதிவிட மாட்டாளா?... எழுதச் செய்து விடமாட் டாளா?...’ என்று சிந்தித்துப் பார்க்கையில், அவளுள்ளிருந்து தன்மான உணர்ச்சி பீரிட்டுக் குமுறிக்கொண்டு மேலெழத் தொடங்கியது. வரட்டும்... பார்த்துக் கொள்வேன்!”... பற்கள் சத்தமிட்டு ஓய்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/190&oldid=664001" இலிருந்து மீள்விக்கப்பட்டது