பக்கம்:தாய் மண்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

அப்போது, அங்கே சாவித்திரி வந்து கதவைத் தட்டினள். . கதவுகளைத் திறந்தவுடன் சாவித்திரியைப் பார்த்தாள் தமிழரசி, ஓர் அரைக் கணம், அவள் மலைப்புத் தட்டி நின்று விட்டாள்!

மின்னிய செயற்கையின் ஒளியிலே சாவித்திரி அழகே உருவமாகச் சமைந்து நின்று கொண்டிருந்தாள்!

பிறை நுதலில் பிறைப் பொட்டு. அலேவிரி கூந்தலில் மணம் சிந்தும் பூங்கொத்து. சாவித்திரிக்கு அவள் கனவு கண்ட காப்பு கிட்டி விட்டதுபோலும்! *

சாவித்திரி!” பெயரிட்டு அழைத்தாள், தமிழரசி, சாவித்திரியின் முகம் தமிழரசியின் திக்குக்குத் திரும் பியது. அவளது உடம்பைப் போலவே முகமும் செழித் திருந்தது.

தோழியைப் புதிய பார்வையுடன் நோக்கினுள் அவள். சகோதரி எனக்குக் காப்பு கிடைத்து விட்டது’ என்றாள் சாவித்திரி, குதுரகலம் பிடிபடாமல்.

“அப்படியா?” என்று கேட்டாள் தமிழரசி, வியப் புணர்ச்சியை அவள் கட்டுப்படுத்த முயன்றும், தோற்றாள்.

“ஆமாம்; எனக்குக் காப்பு கிட்டிவிட்டது. என் நெஞ்சில் வாழும் என் அன்பு அத்தானே இனி என்றென்றும் ‘எனக்குக் காப்பாக இருப்பார், தமிழரசி’ என்றாள் சாவித்திரி. மிகுந்த உறுதிப்பாடு தொனித்தது, பேச்சில்.

சாவித்திரியை - திருமதி சுந்தரேசனை - இமைக்காமல் இமை வலிக்கப் பார்த்தாள். அவள் இமைகள் வலிக்கவில்லை. நெஞ்சில் அன்பு சுரந்தது. அவளை நோக்கிக் கை குவித்தாள் தமிழரசி, - -

சாவித்திரி ஆனந்தக் கண்ணிர் வடித்தாள். “உங்க முன்னே நான் ரொம்பவும் சாதாரணப் பெண்! என்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/191&oldid=664002" இலிருந்து மீள்விக்கப்பட்டது