பக்கம்:தாய் மண்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இந்த மனவெற்றிக்கு உங்க பெண்மைச் சக்திதான் காரணம், டிச்சர்!’ என்றாள் அவள்.

உணர்ச்சியின் பிழம்பாள்ை தமிழரசி, சாவித்திரி தூவி விட்ட பூமணம் அறையின் சுவர்களுக் குள்ளேயே பரவிக் கொண்டிருந்தது. அதைப் போலவே, சாவித்திரியின் நினைவும் அவளிடை மணம் பரப்பியது.

தமிழரசி அன்றைக்குப் பட்டினி. கண்ணுேடு கண் பொருதவில்லை, அவள்.

புலர்ந்தது. மேற்கே வைகறை நிலவு ரத்தம் செத்துக்காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது.

காலம் ஒரு புள்ளிமான்

இருபத்துமூன்று

- மூன்று நாள் லீவுக்குப் பிறகு, அன்றைக்குத்தான் தமிழரசி பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டாள். வழக்கமாக வீட்டைவிட்டுப் புறப்படும்போது, ஒரு முறை இடது பக்கம் பார்வையைத் திருப்பி மீட்டுக் கொண்டுதான் அவள் நடப்பது வழக்கம். அவ்வாறு, அவள் இடது புறம் திரும்புகையில், அவள் நோக்கிலே மோகன்தாளின் இல்லம்தான் தென்படும். அந்த வீட்டின் வெளித்தோற்றமே அவளுக்கு ஒர் ஆறுதலைக் கொடுத்து வந்தது. அவ்வீட்டைப் பார்த்தாலே, மோகன் தாலைப் பார்த்ததுபோலத்தான் என்றுகூட அவள் சமயங் களில் தனக்குத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளுவதும் உண்டு. ஆனல், இன்றாே அவள் மோகன்தாஸின் வீட்டுப் பக்கம் பார்வையை நிலை நாட்டிய தருணம், அவளையும் அறி யாமல் அவள் மனமும் நயனங்களும் கலங்கிக் குமுறின. ஏமாற்றத்தின் சலிப்புடன் பார்வையைத் திருப்பிக்கொண்டு அவள் நேர் வசமாகத் திரும்பி நடக்கலாள்ை. தன்னம்பிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/192&oldid=664003" இலிருந்து மீள்விக்கப்பட்டது