பக்கம்:தாய் மண்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

யும் நெஞ்சுப் பலமும் அவளது பாதை ஆயின. பிறப்பின் அருமை குறித்து அவள் படித்த - சிந்தித்த - சொன்ன பழங்கருத்துக்களே இப்போதும் நினேவிலும் நெஞ்சிலும் நிறைத்துக் கொண்டு அவள் வழி விலக்கி வழி நடந்தாள். விழி விலக்கி விழி தொடர்ந்தாள். மனத்தின் திண்மை அவள் முன்னே புதிய மண்ணைக் காட்டியது.

மாணவிகள் சிலர் தமிழாசிரியைக்கு வணக்கம் தெரிவித்து ஒதுங்கி நடந்தார்கள்.

பள்ளிக்கூடத்தின் வெளிப்புறக்கதவு வழியே அவள் துழைந்தாள். அவளுக்கெனக் காத்திருந்த சாவித்திரியும் அவளைத் தொடர்ந்தாள். அன்றாெரு நாள் இரவில் வீட்டுக்கு வந்து புதிய அதிசயத்தை விளைவித்துச் சென்ற புதுமைப் பெண் சாவித்திரியைப் பற்றிய சிந்தனையிலேயே அன்றைய இராப் பொழுதின் பெரும் பகுதியைப் போக்கிய விசித் திரத்தை அவள் மறக்க முடியாது. தன் வாழ்வில் இடைமறித்த துர்ப்பாக்கியங்களைப் புள்ளிக் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டுமென்றிருந்தாள் அவள். ஆனல், அவள் தன் வாழ்வுக் கணக்கையா பார்த்தாள்? - இல்லையே! சாவித்திரி போட்டுச் சென்ற ஆச்சரியக் குறியின் லயிப்பி லேயே மெய்ம்மறந்து போளுளே தமிழரசி!...

சாவித்திரி இப்போது தமிழரசியை ஊடுருவிப்பார்த் தாள். ‘டிச்சர்! உங்க கண் வெளுப்புத் தட்டியிருக் கிறதே!... மனசுக்கு ஏதானும் உளைச்சலா?... இல்லாட்டி இப்படி ஆகாதுங்களே, தமிழரசி’ என்று துருவிள்ை சாவித்திரி. -

அவள் என்ன பதில் சொல்லு வாள்? தன் காதல் தோற்ற கதையைத் தன் சக ஆசிரியையிடம் அன்றிரவே சொல்லிவிடத்தான் தவித்தாள். ஆலுைம், அன்றிருந்த சூழ் நிலையில் அவளுக்குத் தன் தவிப்பை வெளிக்காட்டிச் சொல்லு வதற்கு வாய்க்கவில்லை. ஏனென்றால், அப்போதைய மனப் போக்கில், சாவித்திரி உண்டாக்கிக் காட்டிய வியப்புதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/193&oldid=664004" இலிருந்து மீள்விக்கப்பட்டது