பக்கம்:தாய் மண்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

தமிழரசியைப் பெரும் அளவுக்குத் தவிப்புக் கொள்ளச் செய்தது!

இருவரும் பேசாமலே நடந்தார்கள்.

தமிழரசியின் கண்கள் ஜலஜாவைத் தேடிக்கொண்டிருந் தன. ஆளுல், அவளைக் காணவில்லை. “அவள் என்னிடம் வலிய வந்துகேலிபேசுவதற்குள் நானே அவளிடம் அன்று வந்த அமைதேயக் கடிதத்தைப் பற்றிக் கேட்டு வம்பு வளர்த்துவிட வேண்டும்!’ என்று துடித்தாள் அவள். ஆணுலும், அப்படி நடந்து கொள்வது நாசூக்காக இருக்காது என்பதையும் அவள் மறுகணம் உணர்ந்தாள். உருவாகும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்ள வேண்டுமென்பதே அவளது: முடிவான திட்டமாக அமையலாயிற்று! -

தன் லட்சியம் சித்திபெருமல் போன விவரத்தை முதலில் இல்லத் தலைவிக்குத் தெரிவித்துவிட வேண்டுமென்றும், அடுத்தபடியாக, சாவித்திரியிடம் பிரஸ்தாபிக்க வேண்டு. மென்றும் அவள் ஆலோசித்தாள். ஆனலும், எதற்கும் சந்தர்ப்பம் என்று ஒன்று வர வேண்டும். இப்போது, பள்ளிக் கடன் அழைத்தது. அவள் விரைந்தாள். -

இனி, தமிழரசிக்குத் தன் கடமைதான் உலகம், சட்டம், நீதி எல்லாம்!

எஸ். எஸ். எல். சி. வகுப்பின் ஒரு பிரிவில் கவி தாகூர் எழுந்தருளிஞர்.

மறுபிரிவில் க விை ய ன் பூங்குன்றனர் மறுபிறவி

கொண்டார். - -

பத்தாம் வகுப்பை நாடிச் சென்றபோது, அவள் பார்வை யில் முத்தழகி தென்பட்டாள். மூக்கின் மையத்தே கைகளைக் குவித்து, விழிகளை மூடியவாறு வணக்கம் செய்தான். தமிழரசி சிரித்தபடி பதில் வணக்கம் செய்தவளாகத் தனக் குரிய வகுப்பறைக்குள் பிரவேசித்தாள். அவள் நுழைந்து மீளும்போது, காலைப்பள்ளி முடிந்ததற்கு அறிகுறியாக மணிச் சத்தம் கேட்டது. X

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/194&oldid=664005" இலிருந்து மீள்விக்கப்பட்டது