பக்கம்:தாய் மண்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். தமிழரசி,

மீண்டும், அவள் மனம் அலை பாய்ந்தது.

திருமணப் பத்திரிகை அச்சடிக்கும் தோதுடன் வந்து விடுமாறு தன் இதயத்தின் அபிலாஷையைச் செப்பிய இல்லத் தாய் திலகவதி அம்மையாருக்கு என்ன பதில் சொல்வது, எப்படிச் சொல்லுவது என்று புரியாமல் தடுமாறினுள் தமிழரசி. ஒரு சமயம், தொலைபேசி வாயிலாகவே, மோகன் தாஸ் சொன்ன முடிவைச் சொல்லிவிடலாமா என்று முடிவு. செய்வாள். மறுசமயம், அம்மாவிடம் நேரில் சென்று விவரத்தைச் சொல்வதுதான் மரியாதை என்று மேஷ. ரிஷபம் கணிப்பாள். எப்படியோ, தனக்குக் கிட்டிய ஏமாற்றத்தில், தன்னைப்போலவே, இல்லத்தின் அன்னேயும் மனம் நொந்து போவாள் என்பதைத் தீர்க்கமாக அவள் உணராமல் இல்லை.

அன்று மாலே பள்ளி முடிந்ததும், அவள் முந்தி நடந்து சென்றாள். மண்ணடி வீதியில் கொஞ்சம் தக்காளி வாங்கிப் பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டாள். பெண் விற்ற: தால் ‘கொசுறு வேறு கிடைத்தது. அங்கிருந்து நடை யைத் தொடர்ந்தாள். வழியில் பழைய நொண்டிப் பிச்சைக் காரன் தள்ளுவண்டியில் அமர்ந்து கைகளால் வண்டியை இயக்கிச் சென்று கொண்டிருப்பதை அவள் கண்டாள். பத்துக் காசு அவள் இருப்பில் குறைந்தது!

புதிதாக வந்திருந்த குமாரி கதீஜா பேகம் அவளே நைனியப்பன் தெரு மடக்கத்தில் சந்தித்தாள். அவள் சொன்ன தகவல்கள் சில தமிழரசியைப் புண்படுத்தின. “வானத்திலிருந்து இறங்கி வந்ததுபோல நடிக்கிருள் தமிழரசி. எல்லாம் சுத்த ஹம்பக்... அவள் ஏற்கனவே: அம்பலவாணன் என்கிற பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளையை லவ்” பண்ணினுள். அவன் கெட்டிக்காரன். தப்பிப் பிழைத்தான். இப்போது மிலிட்டரி ஆசாமி ஒருவன் கிடைத்திருக்கிருன். அவன் நொண்டி. அதனால்தான், அவன் இவள் பக்கம் சாய்ந்திருக்க வேண்டும். பார்க்கலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/195&oldid=664006" இலிருந்து மீள்விக்கப்பட்டது