பக்கம்:தாய் மண்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இந்தக் கதைக்கும் எத்தனே நாள் டயம் என்று!...” என்று தன்னைப்பற்றிக் கதிஜா போகத்திடம் ஜலஜா அவதூறு பேசிய விஷயங்களை விஸ்தாரமாகக் கேள்விப்பட்டவுடன், தமிழரசிக்கு ரத்த நாளங்கள் துடித்தன. முந்தி வந்த மொட்டைக் கடிதத்துக்குக் காரணமானவள் குமாரி ஜலஜா தேவி என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள அவளுக்கு வெகு நேரம் ஆகவில்லை. ஜலஜாவை நேரில் சந்தித்து அவளே ஆத்திரம் தீர ஏசிப் பேசிவிட வேண்டுமென்று அவள் சினம் கொண்டாள். -

அவள் வீட்டை அடைந்ததும், சிறு பொழுதுவரை மனக்கிலேசத்துடன் அப்படியே பிரமை பிடித்து உட்கார்ந்து விட்டாள். பிறகு, இரவுச் சமையலுக்குத் தக்காளிப் பழங் களைத் துண்டு போடத் தொடங்கிலுள். அப்போது, சீதை வந்தாள். ‘ எங்கே டீச்சர் உங்களைக் காணலே?” என்று கவலை சேர்த்துக் கேட்டாள்.

“உடம்புக்குச் சுகமில்லை!” என்று பொய் பேசினுள், தமிழரசி. உங்க அண்ணுச்சி சுகமாக இருக்காங்களா?” என்று அவளிடம் விசாரித்தாள், தமிழரசி.

‘சுகமாக இருக்காங்க. அவங்ககூட உங்களைப்பற்றி என் கிட்டே கேட்டாங்களாக்கும்!” என்றாள் சீதை.

“அப்படியா?’ என்ற கேள்வியுடன் அவள் பேச்சு முடிந்தது. அவர் முகத்தைப் பார்க்காமல் இருக்கத்தான் முடியவில்லை. என்ன செய்வது? கதை திசை தப்பிப் போய் விட்டதே!’ > .

முகட்டில் இருந்த காகம் ஒன்று கரைந்தது. விளக்குகள் ஏற்றப்பட்ட நேரத்தில்,சாவித்திரி வந்தாள். அவளிடம் தனக்கு நேர்ந்த துர்ப்பாக்கியத்தைத் தெரிவித் தாள் தமிழரசி. கட்டுப்பாடான அமைதியுடன் பேசிள்ை

அவன். -

சாவித்திரி துன்பம் மிகுந்து காணப்பட்டாள். “லவிதம் என்றும் விதி என்றும் சொல்கிறார்களே, அது இம்மாதிரியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/196&oldid=664007" இலிருந்து மீள்விக்கப்பட்டது