பக்கம்:தாய் மண்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

ஒரு முடிவைக் கொண்டுதான் போலிருக்கிறது!... நடந்த தைச் சொப்பனமாக எண்ணி மறந்து விடுங்கள். மிஸ்டர் மோகன்தாஸை மறந்து விடுங்கள், தமிழரசி!’ என்றாள் சாவித்திரி.

“மோகன்தாஸை மறந்து விடுங்கள்!” என்று அவள் தூண்டிய அந்த எச்சரிக்கை, தமிழரசியின் ஹிருதயப் பகுதி) யைத் தாக்கியது: துடி துடித்தாள். நெற்றிப் பொட்டில் கவண் கல் பட்டமாதிரி துடி துடித்தாள். ‘சாவித்திரி! அப்படிச் சொல்லாதீங்க!-அன்பர் மோகன்தாளை நான் மறக்க வேண்டுமா? ஐ:ையோ! அவர் என் காதலை ஏற்க வில்லை. அதற்கு அவர் சூழல்தான் காரணம். அதற்காக, அவரை மறந்துவிட முடியுமா? நம் தாய் மண்ணைக் காப்பாற் றப் போராடிய தியாகி அல்லவா அவர்! நாட்டின் மானம் காக்கத் தன் இரு கால்களையும் தியாகம் செய்த தீரர் ஆயிற்றே அவர்!... அவரையோ, அவரது அன்பையோ நான் இந்த ஜன்மத்தில் மறக்க முடியாது. அவர் தியாகி!அவர் என்றென்றும் என் வணக்கத்துக்குரியவர்: அந்தப் பக்திப் பண்பாட்டின் துணையினுல்தானே அவரிடம் என் மனமும் அதுவரை அண்டிக் கிடந்தது?...’ என்று நிலையை நியாயபூர்வமாக எடுத்துக் காட்டி விளக்கினுள், தமிழரசி.

“எப்படிப் பார்த்தாலும் நீங்க ஒரு அதிசயப் பெண்ணு கத்தான் என் கண்களுக்குக் காட்சி தர்றீங்க உச்சர்!” என்று நெஞ்சொட்டிப் பாராட்டினுள், சாவித்திரி.

மார்கழி வரப்போகிறது, பாருங்கள்.

அதளுல்தான் குளிர் தாங்கவில்லை.

இருள் கொட்டியது.

பணியும் கொட்டியது. -

இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு தான் சாவித்திரியால் அங்கிருந்து நழுவ முடிந்தது.

நிலவைப் பி டி த் து விளையாட ஆசைப்படுகிறது, குழந்தை. ஆளுல், அதற்கு நிலவு கிடைக்கவில்லே என்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/197&oldid=664008" இலிருந்து மீள்விக்கப்பட்டது