பக்கம்:தாய் மண்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

தெரிந்ததும், ஒரு பாட்டம் அழுகைப் படலத்தை விரித்து விட்டுப் பிறகு, கப்சிப்” என்று ஒய்ந்து விடுகிறது. அதன் ஆசை வேறு புதிய போக்கிற்குப் பாய்ந்து விடுகிறது. மீண்டும் சிரிப்பும் கும்மாளமும்தான். குழந்தைகள் உலகம் தனி. குழந்தைகளால் எதையும் ஆசைப் படவும் முடிகிறது: அதை ஒத்து, மறந்து விடவும் முடிகிறது! குழந்தைகளுக்குப் பகவான் அருளிய வரப்பிரசாதம் இந்நிலை!

தமிழரசி தன்னை நினைத்து, தன் விதியை நினைத்து, விதியின் வினையை நினைத்து, வினையின் தெய்வத்தை நினைத்து மெளனத் துன்ப வெள்ளத்தில் அவள் நாட்களேயும் பொழுது களையும் ஒட்டினள்,

தமிழரசி ஆசைப்பட்டாள்; ஆசைப்பட்டது வாய்க்க வில்லை. ஆனால், அந்த ஏமாற்றத்தை அவளால் மறக்கவும் முடியவில்லை. அவள் உயிர்க்கழுவில் ஊசலாடினுள், ஆற் ருமை அவளை நிரம்பவும் சோதித்தது. பால் தொட்டுப் பால் கறப்பது வழக்கம். இவள் துன்பத்தைத் தொட்டுத் துன்பத்தை வளர்த்தாள். தன் பிறப்பின் புதிரை எண்ணி :ளுள், வீரர் மோகன்தாஸைச் சந்தித்த முதற் சந்திப்பை எண்ணினுள்: அவனுடைய நாட்டுப் பணியின் காரணமாக, அவன் தன்னுடைய இரண்டு கால்களேயும் இழந்து வந்த அந்தக் காட்சியால், நெஞ்சம் உருகி உணர்ச்சி வசப்பட்டு நின்ற அவள், தெய்வத்திற்குப் போட்டிருந்த மலர்மாலையை எடுத்துப்போய் அவன் கழுத்தில் போட்டுக் கும்பிட்ட அந்த மறக்க முடியாத நிகழ்ச்சியினைச் சிந்தித்தாள். அவளையே தன் துணையாக்கிக் கொண்டு, அதன் மூலம் அவனுக்குத் தான் ஒரு துணையாக ஆகிவிட வேண்டுமென்று இலட்சியக் கனவு கண்டு, முடிவில் எல்லாமே பொய்யாய், கனவாய், பழங் கதையாய்ப் போய்விட்ட விதியையும் சித்தத்தில் ஏற்றினுள். துன்ப நினைவுகளின் நிலைகள் அவள் இருதயத்தில் சங்க மம் ஆயின. அவள் நெஞ்சம் படபடத்தது; இருதயத் துடிப்பு துரித கதியில் இயங்கியது. அவள் இருந்த இடத் தைத் துறந்து நீங்கிளுள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/198&oldid=664009" இலிருந்து மீள்விக்கப்பட்டது