பக்கம்:தாய் மண்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

நீங்காத நினைவுகளாக, கஸ்தூரி அன்னை இல்லத்தின் தாய் குமாரி திலகவதி அம்மையாரின் அன்புப் போழிவுகள் அவள் ஆத்மாவை இட்டு நிறைத்தன. அந்த அமைதியின் ஆறுதலே தனக்குக் கிடைத்த மகத்தான பாக்கியமாகவும் அவள் கருதி மகிழ்ந்தாள். அந்தத் தாயின் அன்பு வாழ்வே தனக்கு ஒர் ஆதரிசம் என்றும், அந்த அன்னையின் தியாக வாழ்வே தனக்கு ஒரு துணை என்றும் கொண்டு ஒழுகி வந்த நிகழ்ச்சியின் பின்னல்களை அவள் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து அமைதி கண்டாள். இந்நிலையிலே, தலைவியைச் சந்தித்துத் தன் ஆசை பொய்த்த சோகத்தை அவளிடம் சொல்லிவிட வேண்டுமென்று நினைத்தாள். ஆனால், அந் நினைவு அவளுக்கு நாட்களைக் கழித்தோடத்தான் கை கொடுத்தது. முதலில் திருவாளர் சொக்கநாதனைச் சந்திக்க வேண்டும்; அவரிடம் எனது பிறப்பு ரகசியத்துக்குத் தடயம் ஏதாவது கிடைக்கிறதா என்று முயல வேண்டும். இதுவே. இறுதி முயற்சி..அப்பால், என் எதிர்காலம் சமுதாயப்பணிக்கே அர்ப்பணம்! அப்போதுதான், என் பிறவிக்கு ஒரு பொருளும் பயனும் கிட்ட முடியும்! ஆம்: தலைவி இருக்கும்வரை எனக்குக் கவலை ஏது? துன்பம் ஏது?’ என்று மனத்தில் கருத்துக்களை அடுக்கினுள். சொக்கநாதன் சந்திப்புக்குப் பிறகு, அவள் சாந்தோம் சென்று திரும்புவாள்!

காலம் ஒரு புள்ளிமான்! போர் நிறுத்த வரம்பைத் தன் போக்கில் மீறிக்கொண்டு தான் இருந்தது பாகிஸ்தான். . .

ஊடுருவல் வேலையில் தனது புத்தியைக் காட்டிக்கொண்டு தான் இருந்தது சீனு, . அங்கே, விண்வெளிக்கப்பல்கள் இரண்டும் விண்ணிடைச் சந்தித்தன.

இங்கே, பாரதி விழா.கோலாகலம்தான்! அன்றைக்குக் காலையில் தமிழரசி பள்ளிக்குப் புறப்பட் டான். வழி நெடுகிலும் வாகுடன் விளங்கிக் கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/199&oldid=664010" இலிருந்து மீள்விக்கப்பட்டது