பக்கம்:தாய் மண்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அம்மையாரின் ஆசீர்வாதம் பெற்ற மாணவி ஆயிற்றே! கடமைக்கும் கண்டிப்புக்கும் கேட்கவா வேண்டும்?...... குமாரி தமிழரசிக்குச் சிறப்பான எதிர்காலம் கண்டிப்பாக இருக் கிறது. தமிழரசியின் சிறப்பான போதனையைக் குறித்து, கல்வி மேலதிகாரி எழுதி வைத்த குறிப்பு மெய்தான்!...” என்று தமிழரசிப் புராணம் படிப்பதில் தலைமைப் பீடம் துளிகூட அழுக்காறு கொள்ளாதது விந்தையிலும் விந்தையே!

கடைசி பீரியட் நடந்து கொண்டிருந்தது.

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்ற பாடல் வரிக்கு

விளக்கவுரை நடத்திக் கொண்டிருந்தாள் தமிழரசி,

அப்போது, வகுப்பின் உள்ளே நுழைந்தாள் குமாரி ஜலஜா. அவள் ஆங்கில ஆசிரியை-அதாவது, ஆங்கிலம் போதிக்கும் உபாத்தியாயினி, சூயெஸ்கால்வாயைக் கடந்து வந்து நிற்பது போலவே காணப்பட்டாள். அவள் கைகளில் நாகரிக அளவுமானி ஏதும் இல்லை. ஆல்ை, அவள் உடுப்புக்கள் நாகரிகத்துக்கு அளவாகக் காட்சி தந்தன. விஷயம் அறிந்த வ; ட் ட | ர த் தி ல் அவளுக்குக்

“கினியோபாட்ரா என்று பேர்!

குமாரி ஜலஜா உள்ளே வந்து நின்றாள். அத்துடன், நிற்கவில்லே. வரிக்குதிரை என ஒரு கனைப்புக் கனைத்தாள். அப்புறம்தான், தமிழரசிக்குத் தன் நினைவு வந்தது. நிமிர்ந் தாள். நிமிர்ந்த வரிக்குதிரையாக, சக ஆசிரியை ஜலஜா நிற்பதைக் கண்டாள். -

“பிளிஸ் எக்ஸ்யூஸ் மி, டமிலரசி’ என்று என்னவோ சொல்லக் குனிந்தாள். இரட்டை வால் ஜடைகள் குட்டை குட்டையாகத் தொங்கின; அதர்வது, தொங்குவதற்குப் பாடுபட்டன.

அதற்குள், ‘வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது.

அப்புறம், வகுப்பு முடிந்துதான் பேசவேண்டும்’ என்று *சூடாக ஒரு சுவை முடிவைச் செப்பினுள் தமிழர்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/20&oldid=664011" இலிருந்து மீள்விக்கப்பட்டது