பக்கம்:தாய் மண்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மாக்கோலங்களின் மகிமையை ரசித்தவாறு அவள் பள்ளி மண்ணை மிதித்தாள். பள்ளியின் தொடக்கத்துக்கு அடையாளமாக மணி ஒலித்தும்கூட, அங்கங்கே ஆசிரியைகள் இரண்டு பேராகவும் மூன்று பேராகவும் கூட்டம் கூடிக் காணப்பட்டார்கள். அப்பால், தலைமை ஆசிரியையின் தலை அங்கங்கே எட்டிப் பார்க்கத் தலைப்பட்டதும்தான், ஆசிரியை களின் தலைகள் அவரவர்களுக்குகந்த வகுப்புக்களில் அடைக் கலம் புகத் தொடங்கின. -

பள்ளியின் சுற்றுச் சார்பிலே சலனம் எழுந்து அடங்கிய விவரம் பற்றி ஏதும் தெரியாது தமிழரசிக்கு. எதையும் அறிந்து கொள்ளும் அக்கறையும் உண்டாகவில்ை அவளுக்கு. கடைசியில், ஸ்கூல் முடிந்து, மத்தியான்னச் சாப்பாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள், அவள். அப் போது, சாவித்திரி ஓடி வந்து அவள் செவிகளில் துரவிய செய்திகளைக் கேட்டதும், அவள் பொறி கலங்கிப் போனுள்: ‘பாவம்!... பரிதாபத்துக்குரிய பெண் ஜலஜா! ஏமாந்து விட்டாள்: பைத்தியக்காரி!...”

ஜலஜாவைப் பற்றிய சிந்தனையோட்டத்துடன் வட்டிலில் போய் அமர்ந்த தமிழரசிக்கு உணவு செல்லவில்லை!

பக்தை மீரா

இருபத்து நான்கு.

மனம் வாழுகின்ற நெறி முறைகளின் தராதரத்தைப் பொறுத்துத்தான், மானுடப் பிறவியின் வாழ்க்கைக்கு அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது; பெருமை அளவிடப்படு: கிறது; மதிப்பும் வரம்பிடப்படுகிறது. இதுவே, மனிதத் தத்துவத்தின் படைப்பு ரகசியமாகவும் அமைந்துவிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/200&oldid=664012" இலிருந்து மீள்விக்கப்பட்டது