பக்கம்:தாய் மண்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

ஆம்; இதுவேதான், மனத்தின் வாழ்க்கை:- இதுவே தான் மானுடத்தின் வாழ்க்கையும்கூட!

வெள்ளிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்து, பூசையை முடித்தபின், பலகாரம் சாப்பிட்டாள். பள்ளிக்கு இன்னும் நேரம் இருப்பதை அறிந்ததும், பழைய புத்தகங்களை எடுத்துக் கடை பரப்பினுள். ஆளுல், அவள் மனமோ குமாரி ஜலஜாவைப் பற்றி எண்ணியது; ஜலஜாவுக்காக அனுதாபப்பட்டது. ஜலஜாவை எடை போட முயன்ற போதுதான், மனம் எனும் சக்தி ஒரு தத்துவமாகத் தமிழரசியின் சிந்தனையில் தெறித்து விழுந்தது. “பாவம்1ஜலஜாவின் சார்பில் அவள் வருந்தினுள்.

தமிழரசி பள்ளிக்குப் புறப்பட வேண்டும். தமிழரசி தன்னைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க, அவள் மனத்தில் இல்லத்தின் தாய் திலகவதியின் மதிப்பும் மாண்பும் நாளுக்கு நாள் உயர்ந்து உச்சத்தில் ஏறிக் கொண்டேயிருப் பதை அவள் இதயபூர்வமாக அறிந்தாள். திலகவதி அம்மையார் ஈடு இணையற்றதோர் அதிசயப் பிறப்பாகவே அவள் இதயத்தில் தோற்றம் தந்தாள். அவளை எண்ணிய போது, தான் ஓர் அற்பம் என்றும் அவள் உணரவும் தயாராளுள். அனதைக் குழந்தைகளையே உலகமாகவும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணியே தன் ஜீவாதாரக் குறிக்கோளாகவும் கொண்டு இலங்கி வரும் அன்னையின் அன்புக்கு, பண்புக்கு, கடமைக்கு, இலட்சியத்துக்கு யார் தான் ஈடாக முடியும், இணையாக முடியும்?

பள்ளி முடிந்து வீடு திரும்புகையில், பழைய புத்தகக் கடையில் தற்செயலாக அகப்பட்டது, “வருண குலாதித்தன் மடல்’. சொற்பக் காசுகள்தாம் செலவு. அவள் வெகு நாளாகப் படிக்க விழைந்த நூல் அது. அதைப் புரட்டிப் பார்த்தாள். மன்மதனக் குறித்திட்ட அழகிய புதிய பதச் சேர்க்கைகளை ரசித்துக் கொண்டே முடினள். நிதானமாக ஒரு நாளைக்குப் படிக்க வேண்டுமென்றும் திட்டமிட்டாள். மேஜையடிக்கு வந்தாள். மகாத்மா காந்திஜியின் சுய சரிதை

தா. ம. 13 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/201&oldid=664013" இலிருந்து மீள்விக்கப்பட்டது