பக்கம்:தாய் மண்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இருந்தது. புரட்டியபோது, அவள் வேண்டிய பட்டினி விரத்ம்’ அத்தியாயம் வந்தது. புலனடக்கத்துக்கு ஒரு சாதனமாகப் பட்டினி விரதம் இருக்கத் தொடங்கிய அண்ணலின் வாழ்வு விரிந்தது. இந்தப் பாடத்தை நானும் முயன்று செயற்படுத்த வேண்டும்.’

தமிழரசி பார்வையைத் திருப்பினள். செய்தித்தாள் இருந்தது. அன்றைச் செய்திகளுக்குக் கிடைத்த வைரக் கிரீடமாகத் திருமிகு ராஜாஜியின் எண்பத்தெட்டாவது பிறந்த நாள் விழா அமைந்து இருந்தது.

தமிழரசி இப்போது மோகன்தாஸை எண்ணினுள். அவனைச் சந்திக்காமல் விலகி இருந்த நாட்களையும் எண்ணி ள்ை. அவளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. மோகன்தாஸ் தனக்கு வழங்கிய தீர்ப்புக்குப் பின்னர், அவனைச் சந்திக்க வேண்டுமென்று அவளது உள்மனம் விரும்பிய தருணங்களி லெல்லாம் அவளது வெளி மணம் வெகு தூரம் சலனம் அடைந்தது. “அன்பர் மோகன்தாஸ் அவர்களேச் சந்திக்கத் தான் விரும்புகிறேன். ஆனல், எனக்கு ஏனே தயக்கம் அதிகரிக்கிறது. இதற்கு அவர் சொன்ன முடிவின் விளைவு காரணமல்ல. அவரைச் சந்திப்பதில் எனக்கு ஆர்வம் இருக் கிறது. அதன் மூலமாக, என் மனம் ஓரளவுக்கு அமைதியும் அடையக்கூடும். இதுதான் உண்மையுங்கூட. எனக்குக் இடைத்த ஏமாற்றம் என் துர்ப்பாக்கியத்தின் விளைவு. அதற்காக, அவரை அன்றும் நோகவில்லை; இன்றும் நோக மாட்டேன். ஆனல்... நான் அவரை மீண்டும் பார்ப்பதை அவர் வரவேற்பாரா?... ஒருவேளை நான் அவரை வலியச் சென்று காண்பதை அவர் தவருகக் கணிக்க நேர்ந்தால்?... ஈஸ்வரா!... என் பிறப்பு ஒரு புதிராக மட்டுமல்ல, ஒரு முழு நேரப் போராட்டமாகவல்லவா ஆகிவிட்டது!... என்ன பாவம் செய்தேன், நான்?’ என்று அவள் தனக்குத் தானே ஆராய்ந்தபோது, அவளுக்கு எஞ்சியது கண்ணிரும் பெரு மூச்சும்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/202&oldid=664014" இலிருந்து மீள்விக்கப்பட்டது