பக்கம்:தாய் மண்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

இவ்விதமான குழப்பத்தின் அதிர்ச்சியில் நாட்கள் எவ்வளவோ கழிந்தோடிவிட்டன:

அவள் பீரோவைத் திறந்தபோது, எடுத்த எடுப்பில் தென்பட்டது அவளுடைய பாங்குச் சேமிப்புப் புத்தகம். எவ்வளவோ கனவு கண்டேன்!’- அவள் ஆற்றாமையுடன் பார்வையை விலக்கிக் கொண்டபோது, கதர்வேட்டியும் சட் டையும் அவள் குறிப்புக்கு இலக்காயின. “அன்பருக்குப் பொங்கல் பரிசாகக் கொடுக்க வேண்டும்!...” திரும்பவும் வெய்துயிர்ப்புத் திரும்பியது.

கிரிதர கோபாலனை நெஞ்சு இணைத்து, நினைவு இணைத்து உருக்கத்துடன் அழைத்துக் கொண்டிருந்தாள் பக்தை மீரா” மானுடப் பெண்ணின் தெய்வக்கனவு பலித்த விந்தை ஒரு சரித்திரமாகவே பரிமளித்துவிட்ட பொற்பை வியந்தவளாக, அவள் கூடத்துக்கு வந்தாள். மோகன்தாஸைச் சந்திக்க வேண்டுமென்ற கிளர்ச்சி எழுந்தது. ஆகவே, முகத்தை அலம்பிக்கொண்டு கண்ணுடிக்கு முன் வந்தாள். பொட்டு பிரதிபலித்தது. ஆலுைம், முன்பிருந்த ஒரு தெளிவு இப் போது முகத்தில் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள். வேதனையின் நெட்டுயிர்ப்புக்குப் பின்னே, அவள் புறப்பட ஆயத்தமாகி, பூட்டுச்சாவியைக் கைக்கொண்டாள்.

அப்போது :

தமிழரசி!’ என்ற அன்பாை குரலை முன்னுேடவிட்ட வாறு வந்து நின்றான் மோகன்தாஸ். உடலுக்கு இரு மருங் கிலும் ஊன்றி நின்ற கைப்பிடிகளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு நின்ற அவன் அவளை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு, “என்னை மறந்திட்டீங்களா தமிழரசி?’ என்று கேட்டான். அவன் கன்னங்களில் மழை பொழிந்தது!

தமிழரசி செய்வகை புரியாமல் திகைத்து நின்றாள். அவன் கேட்ட கேள்வியையும் வடித்த கண்ணிரையும் அவளால் தாங்க முடியவில்லை. அவளும் பதிலுக்குக் கண்ணிர் வடித் தாள். ‘உங்களை மறந்திட்டால், அப்புறம் என்னலே உயி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/203&oldid=664015" இலிருந்து மீள்விக்கப்பட்டது