பக்கம்:தாய் மண்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

தரிக்க முடியாதுங்களே!” என்று தேம்பினள். ‘உங்களைப் பார்க்கிறதுக்குத்தான், இப்போது புறப்பட்டுக்கிட்டிருந் தேனுங்க!’ என்றும் சமாதானம் சொன்னாள்.

“நான் இதுக்கு முன்னே பலமுறை வரத்தான் துடிச்சேன். ஆனல், நீங்க என் வருகையைத் தப்பாய் நினைச் சால் என்ன செய்கிறதுன்னு பயந்துதான் வராமல் இருந் திட்டேன்!” என்று உள்ளத்தை மறைக்காமல் பேசினுன்,

“ஐயையோ, அப்படியெல்லாம் இனிமேல் எண்ணு. தீங்க. அன்புக்குக் கட்டுப்பட்டவுங்க நாம் ரெண்டு பேரும். ஆனதாலே, அன்புக்காகவே, அன்பு செலுத்தக் கடமைப் பட்டவங்களும் நாம்தான். அன்பை மதிச்சு - அன்பை வாழ்த்தும் பக்குவப்பட்ட உங்களுக்கும் எனக்கும் அன்பு தாங்க எப்போதும் சதம்!... அந்த அன்பு நம்மோட தூய நட்பை - புனிதமான பாசத்தைக் கடைசிவரைக் காப்பாத் தாமல் போகாதுங்க!...”

அவளது மனமொழிகளை மெய்ம்மறந்து கேட்டான் அவன்.

தமிழரசி சுய உணர்வு அடைந்து அவனை நோக்கினுள்.

அவன் இன்னமும் நின்று கொண்டுதான் இருந்தான்.

பதறினுள் அவள். “உட்காருங்க!’ என்று வேண்டினுள். தூக்க மாத்திரை சாப்பிட்டு அமர நித்திரை செய்ய முனைந்த கட்டத்தில் தன் நிமித்தம் கண்ணிர் பெருக்கிய மோகன் தாஸின் அற்புதமான மனப்பண்பு இப்போது அவளுள்ளே நிழலாடியது. -

அன்றாெரு நாள் தன் காதலுக்கு முடிவு வழங்கியபோது, அவன் கொட்டிய கண்ணிரையும் அவள் நெஞ்சத்தில் ஏந் திள்ை. நீங்க அளிக்க முன் வந்த இந்த மகத்தான பாக்கி யத்தை அங்கீகரிக்க முடியாத நிலைமையிலே நான் இருக் கிறேன். அதுக்காக, நீங்க பெரிய மனசுபண்ணி என்னை மன்னிச்சிட வேணும். எனக்காக ஏற்கனவே ஒரு காதவி ரொம்பக் காலமாய்க் காத்துக் கிட்டிருக்கு நீங்க என்னைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/204&oldid=664016" இலிருந்து மீள்விக்கப்பட்டது