பக்கம்:தாய் மண்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

தயவு செஞ்சு தப்பாய் நினைச்சுக்காதீங்க!...” என்று பரிவுடன் கெஞ்சிய சம்பவத்தையும் அவள் மனச்சான்று படம் பிடித்து வைத்திருந்து இப்போது அதைப் பிரித்துக் காட்டியது.

தாய் நாட்டு வீரன் மோகன்தாஸைக் கைத்தலம் பற்றக் காத்திருக்கும் அந்த முகமறியாப்பெண்ணின் நற்பாக்கியத்தை வியந்து உள்ளுறப் பலமுறை போற்றிப் பாராட்டியிருக் கிருள், தமிழரசி. அந்தப் பாக்கியவதியை நேருக்கு நேராகச் சந்திக்கவும் துடித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் திருமணத்துக்கு முன்பாகவே ஒரு விருந்து வைக்க வேண்டு மென்றும் அவள் திட்டமிட்டிருக்கிருள்!...

“தமிழரசி!’ - அவள் சிவிர்த்துக் கொண்டு கண்களைத் திருப்பினள். கைகளைச் சுவாமி விவேகானந்தர் மாதிரி மார்பை அனைத்துக் கட்டிக்கொண்டு நின்றாள் அவள்.

“இந்தாங்க!” என்று சொல்லி ஒரு வாழை இலைப் பொட்டணத்தை அவளிடம் நீட்டின்ை அவன்.

“'என்ைேட ஏழைப் பெற்றாேர்கள் இந்த ஏழைப்பிள்ளைக் கென்று இந்தப் பணக்கார இனிப்பைச் செஞ்சு கொடுத் தாங்க. அதிலே துளியை உங்களுக்காகக் கொணர்ந்தேன்!”

கைதொட்டுப் புசிக்குமுன்னே அந்த ஹல்வாவின் இனிப்பு பூராவும் அவள் மனத்தில் பரவியது, உணர்ச்சி சுழிக்க, ஆனந்தக் கண்ணிர் சுழிக்க, அவள் அந்த இனிப்பைப் பெருமையுடன் வாங்கிப் பாசத்துடன் சுவைத் தாள், பிறகு, நன்றியறிவு சொன்னுள்.

“அன்புக்கு நன்றி தேவையில்லிங்க!’ என்று மெல்லிளஞ் சிரிப்பை உதிர்த்தவகை, அங்கிருந்து புறப்படப் பற்றுக் கோடுகளைப் பற் நின்ை.

அப்போது, வாசலிலிருந்து, “அம்மா, தாயே!’ என்ற குரல் கேட்கவே, தமிழரசி வெளியே சென்றாள். மோகன் தாசும் எட்டிப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/205&oldid=664017" இலிருந்து மீள்விக்கப்பட்டது