பக்கம்:தாய் மண்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

வழக்கமாகக் காணப்படும் நொண்டிப் பிச்சைக்காரன் வண்டியில் “ஜம்"மென்று வீற்றிருக்க, அவ்வண்டியை இழுத்து நின்றாள் ஒர் இளம்பெண். தெருவிளக்கின் வெளிச்சத்தில் அந்தப் பெண் அந்தமாகத் தோன்றிள்ை. அவள் முகத்தில் பெருமையும் சாந்தமும் போட்டியிட்டிருந்தன. நெற்றியில் சாந்துப் பொட்டு. தலையுச்சியில் டிசம்பர்ப் பூக்கொத்து.

அந்தப் பிச்சைக்கார ஜோடியை இமை மூடாமல் பார்த் தாள். தமிழரசி. அவர்களைப் பார்த்துவிட்டு, அதே சடுதி யுடன் மோகன்தாஸையும் பார்த்தாள். அவன் கலங்கிய கண்களைத் தரிசித்ததும், அவளுக்கும் கண்கள் கலங்கின.

‘அம்மா, நேரமாயிடுச்சுங்க. ஏதானும் போடுங்க!” என்றாள் பெண். -

“இரும்மே! அவசரப்படுறியே!... பட்டணத்துக்கு வந்திட்டாலே ஒரு அவசரமும் கூடவே வந்திடும்போல!... இனிமே, மறு ரவுண்டு சுத்தவா போருேம்! அதான் இல்லையே! சோறு துண்ணுட்டு துரங்கப் போருேம்! அவசரப் படாதே... நீங்க கோபப்படாதீங்க அம்மா!... பொண்ணு ரொம்பத் தங்கமுங்க! ரெண்டு காலும் போன இந்தப் பாழும் ஜென்மத்தும் பேரிலே கடவுளாட்டம் பச்சாதப்பட்டு எனக்குக் கடைசி பரியந்தம் துணை இருக்கிறதா வந்து என் னேட சேர்ந்திருக்குதுங்க!...” என்றான் அவன்; அளவு கடந்த நன்றி கனிந்தது, அவனது இதயக் குரலில்.

கதி மாறிச் சுழன்றவாறிருந்த மன லயிப்பில், வாய் பேச நினவிழந்து, கொஞ்சம் சாதம் குழம்பு கொண்டு வந்து கொடுத்தாள். - -

பிச்சைக்காரன் காதலி கையெடுத்துக் கும்பிட்டாள். அந்தப் பெண்ணை நோக்கி மோகன்தாஸ் கும்பிட்டான். நல்ல வேளை, அக்குள்களில் அணைந்திருந்த ஊன்றுகோல்கள் தடுமாறிவிடவில்லை.

வண்டியை இழுக்கத் தலைப்பட்டபோது அந்த நொண்டி யின் பார்வை அதிசயத்துடன் மோகன்தாஸின் கைப்பிடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/206&oldid=664018" இலிருந்து மீள்விக்கப்பட்டது