பக்கம்:தாய் மண்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

களையே வெறிக்க வெறிக்க நோக்கியதைத் தமிழரசி கவனிக் கவே செய்தாள்.

மோகன்தாஸ் அங்கிருந்து புறப்படும்பொழுது,"தெய்வங் களே நாம் மனித உருவங்களிலே சந்திப்பது சாத்தியமாகத் தான் அமைந்து விடுகிறது! இல்லீங்களா, தமிழரசி’ என்று சொன்ன பேச்சின் ஒலி அலைகள் இன்னமும் அவள் செவி களில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

நாளைக் கழித்து ஞாயிற்றுக்கிழமை எப்படியும் சொக்க நாதன் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்ற நினைப்புடன் அவள் உணவு கொள்ள அமர்த்தாள். சுற்றிக் கிடந்த பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டே அவள் சோற்றுக் கவளங்களை உருட்டிப் போட்டாள். எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட “பாட்டன் டாங்கு"களைக் கொண்டே அமைக்கப்பட்டிருந்த ‘பாட்டன் நகரின் படங்களைப் பார்த்துச் சிரித்தபடி சாப்பிட்டாள்.

அவள் சோற்றுப்பானையைக் காலி செய்துவிட எண்ணிய மாத்திரத்தில், ‘அம்மா, தாயே!... என்னலே பசியைத் தாளவே முடியலேம்மா ரொம்பப் பசிக்குதம்மா!’ என்று தீனக் குரலொன்று கேட்கவே, அப்படியே பானையை நிமிர்த்தி வைத்துவிட்டு எழுந்து கை கழுவிள்ை. மிச்ச மிருந்த முக்கால்வாசிச் சோற்றைச் சருவச் சட்டியில் அள்ளி நிரப்பிக்கொண்டு வாசல்பக்கம் நாடி வந்தாள்.

அங்கே, அபலேப்பெண் ஒருத்தி நாற்பத்தைந்து ஆண்டு களின் வாழ்க்கையிலேயே நலிந்து சலித்துவிட்ட தோற்றத் துடன் நின்றிருந்தாள். ஒரே மூச்சில் சோறு அவ்வளவையும் காலி செய்துவிட்டு, போதாததற்கு ஒரு செம்புத் தண்ணிரை யும் குடித்தாள். அதற்கப்புறம், பலத்த ஏப்பம் ஒன்றையும் வெளியேற்றிள்ை. கை ஈரம் காயுமுன்னே, அந்த அம்மணி தமிழரசியின் இடது கன்னத்து மச்சத்தைத் தொட்டுப் பார்த்தாள். மறுகணம், “ஐயையோ, தெய்வமே! எம் மவளுக்கும் இதுபோலத்தானே இடது கன்னத்திலே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/207&oldid=664019" இலிருந்து மீள்விக்கப்பட்டது