பக்கம்:தாய் மண்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

அழகான மச்சம் இருக்குமே!... ஐயோ... எம் மவளே,

ராசாத்தி!...’ என்று பாசவெறியுடன் அலறிச் சிரித்தபடி

தலை தெறிக்க ஓட்ட மெடுத்தாள்!

சித்தம் பேதமடைந்து விட்டதா, அந்தத் தாய்க்கு?...

மங்கள பவனம்

இருபத்தைந்து

மகாலட்சுமியின் வடிவம் பூண்டு அந்தத் தெருவில் அடியெடுத்து வைத்தாள் தமிழரசி, அந்தத் தெருவின் பெயர்: மகாலட்சுமி தெரு. அத்தெருவின் பெயரைப் படித் ததுமே, அவள் மகாலட்சுமியின் மங்கள செளபாக்கியத்தை உணர முடிந்தது. அவளே மகாலட்சுமியாகப் பொலிந்தாள். பிறை நெற்றியில் பிறைச்சாந்து: வாடாமல்லிப் பூச்சரம் கொண்டையில். ரோஜாப்பூ நிறப் புடவைக்குப் பொருத்த மாக ரோஜா நிறத்தில் சோளி. பாதரட்சைகள் சரசரக்க” நடந்தாள்.

நேற்று வானம் எப்படிப் பிளந்து கொட்டித் தீர்த்து விட்டது! அங்கங்கே குழிகளில் தேங்கிய நீர்வட்டங்களில் கொசுக்கள் ராஜ்யபாரம் நடத்தின.

இளங்கிரணங்கள் அவள் கண்களைக் கூசச் செய்தன. அவள் கைக்குட்டையை எடுத்து இடது கையில் பிடித்து நடந்தாள்; நெற்றியில் அனைத்துக் கொண்டு நடந்தாள். எதிர்ப்பட்டாள் காஞ்சனை. தமிழரசிக்கு நட்பு.

“உங்க சோளியும் சேலையும் ரொம்ப ஷோக்காக “மாடச் ஆகியிருக்கு ஆமாம்; எதுவுமே ஒண்ணுக் கொண்ணு ‘மாட்ச் ஆளுத்தான் பொருத்தம் எடுப்பாவும், பார்க்கிற துக்கு இயற்கையாவும் தோணும்.இல்லையா, மிஸ் தமிழரசி?”

தோழியின் பேச்சு அவளது காதுகளில் வி ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/208&oldid=664020" இலிருந்து மீள்விக்கப்பட்டது