பக்கம்:தாய் மண்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

“ஆமாம்!'-தமிழரசியின் இமைப்புருவங்கள் விரிந்து நெற்றி மேட்டைச் சுருக்கின. செளக்கியமா, காஞ்சனை?’’ என்று கேட்டாள்.

சுக செளக்கியத்திற்கு இணக்கமான மறுமொழி பகர்ந் தாள், காஞ்சனே. அனுதை விடுதியில் தமிழரசியுடன் தங்கிப் படித்தவள், காஞ்சனே. எஸ். எஸ். எல். வி. வகுப்புக்கு வந்தாள். அவளுடன் சீதேவியும் தொடர்ந்திருக்க வேண்டும். இதே தியாகராயநகரின் பணக்கார விதவை ஒருத்தியின் பாசத்துக்குப் பாத்திரமானுள். முந்திய ஆண்டுவிழாவில் காஞ்சனே ஆடிய, “ஆண்டாள் நடனத்தில் மனம் ஈர்க்கப் பட்ட அவள், பிறகு தலைவியைக் கண்டு பேசி, காஞ்சனேயைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளும் நோக்கத்தைச் சொல்லி, விஷயத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொண்டாள். தாய் தந்தை இழந்திருந்த காஞ்சனக்குத் தாய் மட்டும் கிடைக்கவில்லை: ஒரு லகாரத்துக்கு நெருங்கிய சொத்தும் சுகமும் கிடைத்தன, அப்பால், அவளுக்குக் காதல் கிடைத் தது. அதன் பலகைக் காதலனும் கிடைத்தான். பணக் கார மாப்பிள்ளை நல்ல பொருத்தம்தான். சுக செளக்கிய மான வாழ்வு. நல்ல பெண். பழங்கதையை அவள் மறப்ப

தில்லை.

“மிஸ்டர் அம்பலவாணன் செளக்கியமா இருக்கிருரா?’’ என்று கேட்டாள் அவள். .

தமிழரசி-அம்பலவாணன் சந்திப்புக்களை அவள் கண்டது உண்டு. -

‘நல்ல சுகமாக இருக்கிறார், அவர்!” என்று பதில் சொன்னுள், தமிழரசி. காஞ்சனையைப் பார்க்காமல், சுவரில் ஒட்டப்பட்டிருந்த எழுத்தாளர் மாநாடு பற்றிய விளம்பரத் தைப் பார்த்தவாறு நின்றாள் அவள். - .

“'உங்க கல்யாணத்தை எப்போது வச்சிருக்கீங்க?” அடுத்த கேள்வி இது. அம்பலவாணனுக்கும் தனக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பது போலவும், அதற்கான .மணவினை நாள் எப்போது என்று தெரிந்து கொள்ள விரும்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/209&oldid=664021" இலிருந்து மீள்விக்கப்பட்டது