பக்கம்:தாய் மண்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

T வழிந்த அசட்டுக் களையை வழித்துவிட்டபடி, ஐலஜா ஷேக்ஸ்பியரின் தமிழ்க் கிளியோபாட்ராவாக நடந்து வெளியேறினுள். முதுகுப் பகுதியின் விரிந்த இடைவெளியில் செந்நிறம் மின்னியது. ஷிபான் பட்டு காற்றில் அலைந்தது.

வாழ்க்கைத் துணைநலம் பற்றிய போதனையின் முடிவாக, ‘இல்லற வாழ்க்கையிலே கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், அப்பால் பெண்களேவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்க முடியும்?’ என்று முடித்தாள்.

காலைப் படிப்பின் காலநேரம் முடிந்தது.

தமிழரசி குடையை விரித்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்ட தருணம், அவளுக்கு டெலிபோன் கால்’ வந்திரு. பதாக ஆயா ஒருத்தி வந்து சொன்னுள்.

ஆடையை வைத்தபின், தமிழரசி விரைந்து சென்றாள்.

பூக்கிண்ணங்கள் ஒதுங்கிக் கொண்டன.

o

சாந்தோமிலிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தி ருந்தது. கஸ்துாரி அன்னை அணுதை இல்லத்தின் தலைவி தான் பேசினுள். தலைவி திலகவதி அம்மையார் வழக்கமாகத் தமிழரசியிடமிருந்து பெறும் rேமலாயக் கடிதத்தைப் பெருததால், மனம் பதறி அவளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாள். ‘அம்மாவுக்குத்தான் என் பேரில் எவ்வளவு அன்பு, எவ்வளவு பாசம்!...... நானே அவர் களுக்குத் தபால் எழுத வேண்டுமென்று இருந்தேன். அதற்குள் எனக்கு “ஃபோன்’ செய்துவிட்டார்கள்!...... ஈன்ற தாய் தந்தையரைக் காட்டிலும் என் பேரில் எவ்வளவோ உயிரை வைத்திருக்கிருங்கள்! இதற்கெல்லாம் நான் எவ் வகையில்-எப்பிறப்பில் அந்த நன்றிக் கடனை அடைக்கப் போகிறேனே? அலகிலா விளையாட்டுடைய அத்தலைவன்தான் வழிகாட்டவேண்டும்; வழிகாட்டிப் பழகியவன் அவன். உதவுவான் எனக் கு!.....”

தான் உடல்நலம் செம்மையுடன் இருப்பதை அறிந்ததும் தான், தலைவியின் குரலில் காணப்பட்ட பதட்டம் அடங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/21&oldid=664022" இலிருந்து மீள்விக்கப்பட்டது