பக்கம்:தாய் மண்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

யவள் போலவும் அவள் கேட்ட கேள்வியில் அர்த்தம். தொனித்தது.

தமிழரசிக்குத் தர்ம சங்கடமாகப் போய்விட்டது. ‘அம்பலவாணன் விஷயமாகக் கேட்கிருளா? அல்லது மோகன்தாஸ் விஷயமாகக் கேட்கிருளா? என்றே மட்டுப் படவில்லை. இவ்விரு நினைவுகளையும் கடந்து, பொதுப்படை யாகவும் அவள் கவலைப் பட்டிருக்கலாமே!

“என் கல்யாண விஷயமாக இப்போது நான் ஒன்றும் தீர்மானம் செய்கிற நிலையிலே இல்லே, காஞ்சனை!”

அவளது பதிலைக் காது கொடுத்துக் கேட்ட காஞ்சனே, அவளைப் பரிவு சேர்த்துப் பார்த்தாள். ‘உங்களுக்கும் மிஸ்டர் அம்பலவாணனுக்கும் கல்யாணம் செட்டில் ஆகியிருக்கும்னு நினைச்சேன். அப்படித்தான் ஒரு நாள் அவர் தெரிவிச்சார். உங்க குணத்துக்கும் அவர் குணத்துக் கும் ரொம்பவும் பொருத்தமாச்சே!...’

தமிழரசிக்கு அந்த நெருக்கடி நிலை மனத்திற்கு உகந்த தாகத் தோன்றவில்லை. மிஸ்டர் அம்பலவாணன் சுடர்க் கொடியைத்தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார்’ என்று சர்வ சாதாரணமாகச் சொன்னுள். “மிஸ்டர் அம்பல வாணனை நண்பராகவே மதித்துத்தான் அவருடன் நான் பழகினேன்!’

காஞ்சனே, “அப்படியா? நான் உங்க மனத்தைச் சலனப் படுத்தி விட்டேனே என்று பயப்படுகிறேன், தோழி! என்று சாதுர்யமாகச் சமாதானம் சொன்னள்,

தமிழரசிக்கு அங்கிருந்து கழன்றால் போதுமென்றாகி விட்டது. புறப்பட்டாள். “என்னை அம்பலவாணன் காதலித். தார். நான் நிராகரித்தேன். இப்போது, நான் மோகன் தாலைக் காதலித்தேன். அவர் என்னை நிராகரித்தார்!...”

திருவாளர் சொக்கநாதனின் பங்களா அவரது கம்பீர மான ஆகிருதியை நினைப்பூட்டுவதுபோல, வெகு எடுப்பாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/210&oldid=664023" இலிருந்து மீள்விக்கப்பட்டது