பக்கம்:தாய் மண்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211

மஞ்சள் பூச்சுடன் விளங்கியது. அது ‘மங்கள பவனம்’. தடுவே பங்களாவை வைத்து, அதன் இருமருங்கிலும் உயர்ந்த பாக்கு மரங்கள் ஒய்யாரமாக நின்றன. தாயின் மணிக் கொடி பட்டொளி காட்டிப் பறந்தது.

தமிழரசி சுற்றுப்புற மதிலைக் கடந்து உள்ளே நுழைத் தாள். வாடாமல்லி நிறக் கார் நின்றது. அவளுக்கு அக் காட்சி அமைதியைத் தந்தது. காரைக் கண்டால் சொக்க நாதனைக் கண்டதற்குக் சமம்தான்!

ஒரு சம்பவத்தை அவள் மறக்க மாட்டாள். ஒரு மகளின் பாசத்துடன் அதைச் சித்தத்தில் தேக்கிள்ை.

சம்பவம் சித்திரமானது.

வித்துவான் படிப்பில் மாகாணத்திலேயே முதலா வதாகத் தேறிய கையுடன் அவளை அழைத்துக்கொண்டு இங்கு வந்தாள் இல்லத்தின் தலைவி திலகவதி அம்மையார். “தம்முடைய பள்ளிக்கூடத்தில் உன்னைத்தான் தலைமைத் தமிழாசிரியையாகப் போட்டுக்க வேணும்னு உன் ரிசல்ட்டைப் பார்த்ததுமே எனக்கு போன் செய்து விட்டாரம்மா. அவருக்கு உன்மீது இயல்பாவே உண்டாகி யிருக்கிற பாசத்துக்கும் உயர்ந்த அபிப்ராயத்துக்கும் இது. ஒரு நல்ல அடையாளமம்மா. மனுஷர் ரொம்ப தங்க மானவர்’ என்று புறப்படும்போதே அவளிடம் விவரம் கொடுத்திருந்தாள் அம்மையார். இல்லத்தின் வளர்ச்சியில் செம்பாதிக்கு மேலாகப் பொருளுதவி செய்து வருபவர் அவர் என்பதைத் தமிழரசி நன்கு அறிவாள். ஆகவே அவரது ஈரத்தை அனுபவித்த பல நூறு அளுதைகளிலே தானும்: ஒருத்தி என்பதையும் அவள் அடிக்கடி எண்ணிப் பார்ப்பதும் வழக்கமாகிவிட்டது. அவர் கையால் அவள் எத்தனையோ பரிசுகள் வாங்கியிருக்கிருள்! சிறுமியாக இருக்கையில் அவள் கன்னங்களில், அவர் எத்தனையோ தடவை செல்லமாகத் தட்டிக் கொடுத்திருக்கிறார்! தமிழரசி, தமிழரசி!’ என்று. அன்பு மொழி மொழிந்து அவள் படிப்புத் திறனைப் பாராட்டி ஊக்குவித்த தவணைகள் எத்தனை, எத்தனையோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/211&oldid=664024" இலிருந்து மீள்விக்கப்பட்டது