பக்கம்:தாய் மண்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

சொக்கநாதன் மாடியில் அவளுடன் சில நிமிஷங்கள் உரையாடினர். அவளுக்குக் கொடுக்கப்பட்ட காபியை அவள் குடித்து முடிப்பதற்குள் அவர் அவளிடம் அவளது பதவி நியமன உத்தரவைக் கொடுத்தார். முன்கூட்டியே “டைப்’ செய்து வைக்கப்பட்டிருந்தது. “உங்கள் எதிர் காலம் மிகவும் சிறப்பாக விளங்குமென்பது எனக்கு இப்போதே நன்றாகப் புரிகிறதம்மா! உங்களுக்கு எல்லா வகையான நல்லதிர்ஷ்டங்களும் வந்து சேர வேண்டுமென்று நான் வணங்கும் அம்பலவாணனைப் பிரார்த்திக்கிறே னம்மா!’ என்று வாழ்த்தினர். எழுதி வைத்துப் படிப்பது போல இருந்தது அவர் பேச்சு. மாணவிக்குக் கிடைத்த பெருமையில் தலைவிக்கு அத்து மீறிய ஆனந்தம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, தந்தையைக் காணப் போகும் ஒரு புதல்வியின் பாசக் கிளர்ச்சிக்குத் தமிழரசியும் விலக்கின்றி இலக்கானுள்! ஆம்; என் வளர்ச்சியில் பங்கு கொண்டவர்களில் ஒருவர் இவர். என்னைப் பற்றி அக்கறைப் பட்ட நல்ல மனிதர்!- இப்படி அவள் நினைவைப் பூச்சர் மாக்கினுள். பூவின் பரிமளம் அவள் உள்ளத்தை நிறைத்த போது, அப்பூமணத்தைத் திசை மாற்றி முயல்வதுபோல, ஆயாள் அன்றைக்குச் சொக்கநாதனைப் பற்றிக் கூறிய சங்கதிகள் அவளே ஆட்படுத்தின. ‘உன்னைப் பற்றின. பிறப்பு அந்தரங்கம் அந்தப் பணக்காரர் சொக்கநாதனுக்குக் கட்டாயம் தெரிஞ்சிருக்கத்தான் வேண்டும். ஏன்ன, உன்னே ஆஸ்பத்திரியிலிருந்து கொண்டு வந்து இல்லத்திலே சேர்ப் பிச்சதும் அவரே தானே!... நீ விவரம் தெரியாத கைக் குழந்தையாய் இருக்கையிலே அவர் உன்னைப் பார்க்கிறதுக் கின்னு வாரத்துக்கு ஒரு வாட்டி எப்படியும் விடுதிக்கு வராம இருந்ததே இல்லையம்மா!... நீ அவரைப் போய் பார்க் கிறதிலே ஒரு தப்பும் இல்லேம்மா!... அவர் மூலம் உனக்கு ஒரு நல்ல சமாசாரம் கிடைச்சதின்ன, நீ அடைகிற அந்தச் சந்தோஷத்திலே அமைதி அடைகிறவங்க என்னைவிட வேற யாரும் இருக்க முடியாது, தமிழரசி!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/212&oldid=664025" இலிருந்து மீள்விக்கப்பட்டது