பக்கம்:தாய் மண்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

கிழவியின் பேச்சு ஏதோ ஒன்றை வெளிக்காட்டி ஏதோ ஒன்றை மறைத்ததுபோலப் பட்டது அவளுக்கு. அந்த “ஒன்றை அவள் அறியமாட்டாமலே, திரும்பிவிட வில்லையா?

நினைவுகள் நீங்கின.

முகப்பு மண்டபத்தை அவள் அடைந்தாள். அவளேயும் அறியாமல் அவள் நெஞ்சின் அடித்தளத்தில் பாசம் இழை யோடிக் கொண்டிருந்தது. சேலைத் தலைப்பை நுனி கண்டு இழுத்து எடுத்து முகத்தை ஒற்றிக்கொண்டு சேலையைச் சீர் செய்தாள். கீழே காலணிகள் தங்கிவிட்டன. முன்பு, வந்திருக்கையில் முகப்பின் வலப்புறம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த போகன் வில்லா மலர்களே நோகாமல் விலக்கியபடி சுழல் மாடி வழியே மாடியை அடைந்துதான் சொக்கநாதனைப் பேட்டி கண்டார்கள். இப்போது, அவள் தனித்திருந்தாள். முகப்பைக் கடந்து, முன் ஹாலே நாடி ள்ை. மையத்திலிருந்த பெருங்கதவுகளில் ஒன்று திறந்தி ருந்தது. அரண்மனை போன்ற பெருமனே அது. நடுவில் எவ்வளவு பெரிய முற்றம்!- செட்டி நாட்டுப் பகுதியில் இருப்பது போல நிலா முற்றம்! பார்வையை மீட்டு முன்கூடத்தை அளந்தாள்.

கட்சி பேதம் கடந்து, மனிதாபிமானம் என்ற தார்மிக உணர்வு ஒன்றுடன், அவரவர்களின் தனித்தனிச் செயல்களைப் போற்றி மதிப்பளிக்கும் வகையில் சுவரைக் கோலம் செய் திருந்த சமுதாயப் பணியாளர்களின் படங்களைப் பிரமிப் புடன் பார்த்தாள் தமிழரசி, அவள் மலைப்பு அடங்கு வதற்குள், அவரவர்களின் உயரங்களுக்குத் தக்கபடி “ஆயில் பெயிண்டிங்'கில் காட்சியளித்த தேசத் தலைவர்களின் வண்ண ஓவியங்கள் வேறு அவளது ரசிப்பைக் கவர்ந்தன. மையத்தில் ஒரு வட்ட மேஜை. அது சிறிது நீண்டிருந்தது. அதற்கு இருபுறமும் வளைந்த இரண்டு தந்தங்கள். மேஜையில் பதில் வெட்டுத் தாஜ்மஹால் கண்களைப் பறிக்கும் வெண்ணிறத். தில் வைக்கப்பட்டிருந்தது. கண்களைப் பறிப்பதற்குப் பதிலாகக் கண்களே ஆகர்ஷித்தன. அதற்குப் புறப்புலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/213&oldid=664026" இலிருந்து மீள்விக்கப்பட்டது