பக்கம்:தாய் மண்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2#4

போலப் பூக்கிண்ணம் ஒன்று பித்தளையில் இருந்தது. அன்றலர்ந்த ரோஜாப் பூங்கொத்து, சார்ந்த இலகளுடனும் சார்பு கொண்ட முட்களுடனும் வைக்கப்பட்டிருந்தது. முட்களைத் திரையிடாமல், காட்சிக்குத் திரை விரித்திருந்த பான்மையை அவள் சிலாகித்தாள்.

தனித்திருந்த நாற்காலி ஒன்றைத் தனக்கு உடந்தை ஆக்கிக் கொண்டாள். தாற்காலிகச் சுவாதீனம். அவள் ரேடியோ இசையைக் கேட்டாள். தீட்சித்ரின் சுபபந்துவராளி உருப்படியைச் சேலம் பாடகர் ஒருவர் பாடிக் கொண்டிருந் தார். அவள் மனம் மெல்லப் பிணைந்து வந்தது. அதற் குள்ளாக, நல்ல தோற்றத்துடன் கூடிய வாலிபன் ஒருவன் ஓடிவந்து, வாங்க, அக்கா!’ என்று வரவேற்றான். அவனு டைய அந்தப் பாசத்தின் அழைப்பு உபசாரம் அவளைப் பெருமைப் படுத்தியது. உடன்பிறந்தானைப் பார்ப்பது போலப் பார்த்தாள். அக்கா’ என்ற பாசத்தின் அலைகள் அவள் மனத்தில் மோதி விலகின. அவன் : பூபாலன். சொக்கநாதனின் ஒரே மகன். பகவானே! நான் அப்பாவைக் கண்டேன?- அம்மாவைக் கண்டேன?- அண்ணனைக் கண்டேன, தம்பியைக் கண்டேன?- இல்லை, அக்காளைத் தான் கண்டேன? - தங்கையைத்தான் கண்டேன:என்று நான் ஏங்கித் துவண்டு மன வெறுப்பு அடையும் சமயத்திலெல்லாம் உன்னுடைய விளையாட்டுக்களை என் னிடம் ஆடிக்காட்டி விடுகிருயே!... அவள் மனம் பாசத்தின் சந்திப்பு நிலையமாக அமையத் துடித்தது.

“அக்கா, முந்தி ஒரு தரம் வந்தீங்க, கஸ்தூரி இல்லத் தலைவியோடே! இல்லீங்களா, அக்கா?” -

அவள் ஊம் கொட்டினள்.

‘தம்பியை நான் அப்போது பார்க்கலியே’ வெகு சுவாதீனமாகப் பேசிளுள். -

“ரொம்ப அவசரமாப் போயிட்டீங்க. குறுக்கே வந்து பேச முடியுங்களா? அக்கா கண்ணுக்குள்ளவே நின்னுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/214&oldid=664027" இலிருந்து மீள்விக்கப்பட்டது