பக்கம்:தாய் மண்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

கிட்டிருந்தீங்க. இப்ப நேருக்கு நேரே வந்து உட்காத் திட்டீங்க!”

அவன் நயம்படச் சிரித்தான். ‘தம்பி, உட்காரலாமே!’ அவன் அமர்ந்தான். மரியாதையுடன் அமர்ந்தான்.

அப்போது, டெலிபோன் மணி ஒலித்தது. “ஆமா.. எஸ்... எஸ்... நான் அவரோட சன் பேசறேன். அப்பா பூஜையிலே இருக்காங்க... பூஜை முடிஞ்சதும் சொல்றேன்... உங்க பேரை இனிஷியலோட சொல்லுங்க...! இனிஷியல் தானே முக்கியம்?... சரி! மா. அங்கயற்கண்ணி! சரி தானே?... ஒ. கே!... வணக்கம்...!” என்ற மிடுக்குக் குறை யாமல் பேசி முடித்தான் பூபாலன்.

“நம்ம தமிழ்நாட்டு ஜவான் மோகன்தாஸுக்கு நீங்க மாலை போட்டுப் புகழ் அஞ்சலி செலுத்தினதைப் பேப்பரிலே பார்த்து ரொம்பவும் கொண்டாடினேன். உள்ளத்து உணர்ச்சியை அப்படியே செயலாக்கி, உங்களோட உள்ளொளியைக் காண்பிச்சிட்டீங்க!... நாடு அவரை மறக்காது! ஆன, அவருக்குத்தான் இனிமே கஷ்டம். பாவம்! நானும் அப்பாவும் போய்ப் பார்த்தோம்!'” -

இன்னும் அவன் ஏராளமாகச் சொல்லத்தான் விரும்பினன். ஆனால், அவன் அனுதாபத்தைக் குறிப்பிட்டு, ‘பாவம் போட்ட அந்தக் குறிப்பு அவள் மனத்தை அதிரச் செய்தது. அதிர்ச்சிக்கு மாற்றாக, அங்கு அவளுக்குச் சமதை யான வயசுப் பெண் ஒருத்தி அழகுக் களையுடன் வந்து நின்றாள். “வாங்க!” என்று பாந்தமுடன் முகமன் கூறினுள். ஈரத் தலையின் நுனி தளர முடிந்து குஞ்சம் போட்டிருந்தது. . -

தமிழரசி மரியாதை காட்டி எழுந்து, பின் அமர்ந்தாள். தன் இல்லத்தரசி தன்னைப் பார்க்க விழைவதாக ஒரு சமயம் சொல்லவில்லையா சொக்கநாதன்? அந்த இல்லத்தின் விளக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/215&oldid=664028" இலிருந்து மீள்விக்கப்பட்டது