பக்கம்:தாய் மண்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 6

இந்தப் புண்ணியவதியாகத்தான் இருக்க வேண்டும்! விளக் கின் உயிர் அந்தக் கண்களில் பளிச்சிட்டது!

“நீங்க...’ என்று கேட்டுக் கொண்டே தமிழரசியின் பக்கத்தில் உட்கார்ந்தாள், அந்தப் பெண். தமிழரசியைப் பற்றிக் கேட்டவள், தன்னைப் பற்றிக் கேட்காமலேயே பதில் சொல்லத் தொடங்கினுள். “இந்தப் பங்களாவை ஆளுற துக்கு வந்திருக்கிற இரண்டாவது ராணி நான். சிவகாமி என்பது என் பேர்!’

அவள் யூகித்தது பொய்க்கவில்லை. “உங்களைச் சந்தித்தைப்பத்தி ரொம்பவும் சந்தோஷப் படுறேனுங்க. நான் ஐயாவோட பள்ளிக்கூடத்திலே தமிழ். போதிக்கிறேன். பெயர், தமிழரசி, முந்தி வந்திருக்கை யிலே, உங்களையெல்லாம் பார்க்கிறதுக்கு முடியல! அந்தப் பயணம் அலுவல் ரீதியாவே போய்விட்டுது!...” என்றாள் தமிழரசி,

“நானும் உங்களைச் சந்திக்கிறதுக்குப் பாசமாயிருந் தேன். அவர் கிட்டே கூட ஞாபகப்படுத்தினேன். ரொம்ப சந்தோஷமுங்க!” என்றாள் சிவகாமி.

‘தம்பி, அக்காவுக்குக் காபி கொண்டு வரச் சொல்!” என்று அன்புடன் பூபாலனப் பார்த்து அறிவித்தாள் அவள். .

சிவகாமியின் எளிய தோற்றமும் உயர்ந்த அழகும் தமிழரசிக்குப் பிடித்திருந்தன. சிவகாமி என்று அவள் பெயரைச் சொன்னதும் தமிழரசியின் இலக்கிய மனத்தில் தமிழ்ப் பேராசிரியர் கல்கி அவர்கள் படைத்த சரித்திரச் சிவகாமியின் உருவம் நிழலாடியது. அந்தச் சிவகாமியை அண்ணுமலை மன்றத்தில் கண்டு மகிழ்ந்த அந்தத் தினத்தை அவள் மறவாள். -

காஞ்சி மாநகரிலே பல்லவவேந்தரின் பேரவையில் மகா சிற்பி ஆயனரின் மகள் சிவகாமி நடன அரங்கேற்றம் செய் ததை எண்ணினள். தமிழரசியின் நெஞ்சரங்கில் கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/216&oldid=664029" இலிருந்து மீள்விக்கப்பட்டது