பக்கம்:தாய் மண்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

சலங்கைகளின் “கலீர், கலீர்’ எனும் இன்பநாதம் கேட்டது. அப்பர் தேவாரம் ஆரம்பித்து வைத்த சிவகாமியின் கதை ைஅதே அப்பர் தேவாரம் முடித்து வைத்த அதிசயத் தில் உள்ளடங்கிக் கிடந்த பல அதிசயங்களே எண்ணி வியக் கும் பொழுதல்ல அது என்பதை அவள் அறியாதவள் அல்லள்.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து திரும்பினுள், தமிழரசி, இந்தச் சிவகாமியும் அவளுக்கு ஒர் அதிசயமாகவே தோன்றினுள்.

இடப்பட்ட ஆணையைச் சிரமேல் தாங்கி, வேலைக்காரி கொடுத்த காபியைக் கைமேல் தாங்கி வந்தான் பூபாலன். காபியைக் கையேந்திப் பெற்றாள் தமிழரசி. சொக்க நாதனின் பாக்கியத்தை அவள் போற்றினுள். அந்தப் பாக் கியத்துக்கு ஆதார சுருதியாகத் தோன்றிய சிவகாமி எனும் ஜீவ வீணையை அவள் எண்ணியபோது, தன்னையும் அறியாமல் அவள்மீது அனுதாபம் ஏற்படுவதை அவள் தடுக்க முடிய வில்லை. ஒன்றின் லாபம், மற்றாென்றின் நஷ்டமாகத்தான் இருக்குமோ? ‘ஒன்றுக்கொன்று மாட்ச் ஆணுத்தான் பொருத்தம் எடுப்பாகவும், பார்க்கிறதுக்கு இயற்கையாக வும் இருக்குமென்று காஞ்சனை சொன்னுள்:

மாடி ஏறிச் சென்ற சிவகாமி இன்னமும் திரும்பவில்.ை இதை உணர்ந்ததும் தமிழரசியின் மனம் சங்கடப்பட்டது. மெள்ள எழுந்தாள். எட்டிப் பார்த்தாள். பூபாலனக் கூட காணவில்லை.

கடிகாரம் ஒன்பது என்று மணி சொன்னது. - - நேரு ஸ்டேடியத்தில் திரை நட்சத்திரங்கள் யுத்த நிதிக் காக நடத்திய பழைய நிகழ்ச்சிகளின் படங்களைப் பார்த்து விட்டு, பத்திரிகையை மடித்து வைத்தாள். -

“அத்தான்! அத்தான்!” என்று சிவகாமி பலத்த குரலில் அலட்டிக்கொண்டிருந்த ஒலம் தமிழரசியின் காதுகளை அடைத்தது. தயக்கத்தைக் கடந்து, அவள் பதட்டத்துடன்

தா. ம. 14 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/217&oldid=664030" இலிருந்து மீள்விக்கப்பட்டது