பக்கம்:தாய் மண்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மாடிப்படிகளைக் கடந்தாள். மாடியின் வெளித் தாழ்வாரத் ஒதுங்கி நின்றாள் அவள்.

“அத்தான்! அத்தான்! ஏன் இப்படி அழlங்க?...”* என்று பதறிஞள்: தெய்வத்தின் முன்னே கண்ணிர் வடித்து நின்ற தன் கணவரின் கண்களைத் துடைத்துக்கொண்டே செருமத் தொடங்கினுள், சிவகாமி. -

மாஜி மிருகம்

- இருபத்தாறு

கனவான் சொக்கநாதனின் கரிய பெரிய விழிகளில் கண்ணிர் கோத்து நின்ற காட்சியைத் தமிழரசி மீண்டும் ஒரு முறை மறைந்து நின்று பார்த்தாள்.

அஞ்சனம் தீட்டிய சிவகாமியின் மான்விழிகள் மீன் களாக மாறி நீந்திக் கொண்டிருந்த அவலக் காட்சியையும் அவள் இரண்டாம் தடவையாக உற்று நோக்கினள். பங்க ளாக்களிலே கண்ணிருக்கு இடம் இருக்காது என்று நினைத் திருந்தாளோ, என்னவோ?-கண்ணிரைத் திரட்டிக் காட்டித் அந்த இரு பிரிவுச் சக்திகளை அங்கே அப்பொழுது கண்டதும், சற்றே நினைவு பிசகிப் போளுள். எல்லாம் கண் சிமிட்டும் நேரம்தான். பிறகு, தெய்வத்தைப் போலவே சிரிப்பும் அழுகையும் நடுவு நிலைமைக் கொள்கை கொண்டவைதாம் என்ற உண்மை புரிந்தது அவளுக்கு. கண்ணிர்த் துளிகள் அவளை மேலும் வியப்புக்கு உட்படுத்த வேலை இல்லாம லேயே போய் விட்டது.

புருஷனையும் மனைவியையும் தமிழரசி ஒரே நோக்கில் பார்த்தாள். வித்தியாசத்தின் இடைவெளி விரிந்தது. சிவகாமி தன் கணவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். “அத்தான்!. அத்தான்!...” என்று அழைப்புக்கள் ஒன்றன் பின் ஒன்றாக உதிர்ந்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/218&oldid=664031" இலிருந்து மீள்விக்கப்பட்டது