பக்கம்:தாய் மண்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

அப்போது, தமிழரசி உள்ளே நுழைய விழையவில்லை. அச் செயலே விவேகத்திற்குப் புறம்பாகக் கணித்தாள். புறத்தே ஒதுங்கிளுள். சாளரத்தின் இடை நடுவில் அவள் விழிகள் வழி கண்டன.

“அத்தான்!...”*

இது ஐந்தாம் தடவை. சிவகாமியின் நா வறண்டிருந் தது. அன்பு ஊற்றுக்கண் திறந்தது.

அப்போதுதான், சொக்கநாதன் அவளை ஏறிட்டுப் பார்த்தார். “நீயா? நீ ஏன் இங்கே வந்தாய்? பூஜை முடிந் தடியும் நான் வந்திட மாட்டேன?’ என்று செல்லமாகக் கடிந்துகொண்டார். பொய்க் கோபம் அது; பொய்ச் சடனே.

‘சும்மாத்தான் வந்தேன், அத்தான்!’

அவளது கதுப்புக் கன்னங்களின் குழிகளில் ஒதுங்கி விருந்த ஈரத்துளிகளே அழகு பார்த்துவிட்டு, அவற்றை அவர் இடுப்புத் துவாலையில் பத்திரப் படுத்தினர். ‘சாமி முன்னடி அழுதால்தான் எனக்கு நிம்மதியாக இருக்குது. இப்படிப் பட்ட காட்சியை நீ பார்க்கிறது. இதுதான் முதல் தடவை போலிருக்குது’ என்றார் சொக்கநாதன். நெற்றித் திட்டில் சிந்தனைக்குக் குறைச்சல் இல்லை. .

சிவகாமி ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

‘அழறதுக்குக்கூட மனசு வேணும். செஞ்ச தப்புக்களை மனச்சாட்சி கிட்டே ஒப்புக் கொள்கிறதுக்கு வலுவும் நாணய மும் மனசுக்கு உண்டானல், அப்பவே, அந்த மனசு தன் தப்புக் களுக்குக் கழுவாய் தேடவேண்டி ஒரே மூச்சிலே அழுது தீர்த்துப்பிடும். நான் இந்த வகைக்குச் சொந்தக்காரன். ஆளு, குற்றவாளிங்க யார் இந்த லோகத்திலே அழத்துணியு ருங்க? அவுங்களோடே சேர்ந்து பவுடர் போட்டு நடிக்கத் தான் சிரிப்பு ரெடியாக இருக்குதே!...”* -

அடியும் இல்லாமல், துணியும் இல்லாமல் தன் கணவர் பேசிய பேச்சு வேதாந்தமாகப் பட்டிருக்க வேண்டும், சிவகாமிக்கு. அவள் முன்னைப் போலவே, இப்போதும் விழித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/219&oldid=664032" இலிருந்து மீள்விக்கப்பட்டது