பக்கம்:தாய் மண்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

தாள். அர்த்தம் விளங்காத பாடலைக்கேட்டு மறுகும் கடைப்பிரிவு மாணவியைப் போல, அவள் காணப்பட்டாள். ஒதுங்கி நின்ற தமிழரசியின் மனம் சொக்கநாதனின் மனத்தை ஒட்டியிருந்தது. அவர் பேச்சின் உரை அவளுக்கு விளங்கி வந்தது. திருவாளர் சொக்கநாதன் ரகசியக் குற்ற வாளியாக இதுவரை இருந்து வந்திருக்கிறார். அவரை அவர் மனச்சாட்சி இனி மேலும் மன்னிக்கத் தயாராக இல்லை. இப்போது, அதன் கெடுபிடிக்குப் பயந்து, தன் தவறு களுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முனைந்து வருகிறார்!...” அறிவு பூர்வமாக அவள் கற்பித்துக் கொண்ட முடிவில் அவள் ஒண்டினுள். அவள் வாதமும் உண்மையின் அடிப் படையில் அப்படியே பலித்துவிடுமென்று நம்பவும் அவள் இதயம் இடம் கொடுக்கவில்லை. காட்சி மாற்றத்துக்குத் திரை விழுகிற மாதிரி, அங்கே மெளனம் விரிந்தது. தமிழரசி கெட்டிக்காரத் தனமாகக் கீழ்த்தளத்தை ஒரே எட்டில் அடைந்து விட்டாள். அவள் முன்னர் அமர்ந்திருந்த இடம் மறந்து போயிற்று. அது ஒரு பெரிய விஷயமும் அன்று. மாடிக்குப் போய்த் திரும்பியது ஒரு குற்றமாகவே அவளுக் குப் பட்டது. ஆலுைம், மேலே போய்க் கீழே வந்ததும் ஒரு லாபம்தான் என்று அவள் சமாதானம் கொண்டாள். இல்லையென்றால், சொக்கநாதனின் உள்ளகம் எப்படி அவளுக்குத் தெரிந்திருக்கக் கூடும்? அவர் மனத்தின் ஒரு பகுதியையாவது அவள் அறிய முடிந்தது. ஒரு நாள் பஸ்ஸில் பிரயாணம் செய்த போது, சுசீலா அவளிடம் சொக்க நாதனைக் குறித்துச் சொன்ன விவரத்தை அவள் நினைக்காமல் இருக்கத்தான் முயற்சி செய்தாள் ஆகுலும், அவளது அறிவின் விவேகம் அந்நினைவின் கதையை அவளது மனச் செவியில் திரும்பவும் படித்துக் காட்டி விட்டது. புறக் கண் களை மூடிக் கொண்டபோது, அகக் கண்கள் திறந்தன. அழகாகக் காட்சி தந்த சிலந்திக் கூட்டுக்கு ஒர் உருவமாகச் சொக்கநாதன் தோன்றினர். -

தமிழரசியின் செவிப் புலன் மாடிப்படிகளைச் சரணடைந் திருந்தது. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/220&oldid=664034" இலிருந்து மீள்விக்கப்பட்டது