பக்கம்:தாய் மண்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

அப்போது, மாடிப்படிகளில் நுட்பம் செறிந்த காலடிச் சத்தம் கிளம்பியது.

“அப்படியா? தமிழரசி வந்திருக்குதா?’ என்று 3519 கொண்டே இறங்கி வந்தார் சொக்கநாதன். பட்டாளத்துச் சிப்பாய் மாதிரி அவர் நிமிர்ந்து படிகளைக் கடந்தார். மார்பில் உரோமக் காடு. தொந்தி குலுங்கி விழுத்தது.

சொக்கநாதனைக் கண்டதும் மரியாதையுடன் எழுந்து கைகூப்பினுள் தமிழரசி,

பதிலுக்குக் கும்பிட்டார் அவர்.

  • வாங்கம்மா, வாங்க!... வந்து ரொம்ப டயம் ஆயிட்டுதா? காலேயிலே பூஜைன்னு கொஞ்சம் நேரம்தான் ஆகிடும். அப்போது யாரும் வந்து என்னையோ, சாமியையோ ‘டிஸ்டர்ப்’ செய்ய மாட்டாங்க. பரவாயில்லே. இன்னைக்கு உங்களுக்கு லண்டேதானே! என்றார்,

அவள் மெளனமாகத் தலையை அசைத்தாள்.

‘எனக்கு மட்டுமென்ன, உங்களுக்கும் லண்டேதானே?” என்று ஒரு “தமாஷ் பேசிவிட வேண்டுமென்றுதான் அவள் விரும்பிளுள். பள்ளிக்கூடத்தில் சாவித்திரி, கதீஜா பேகம், ஸ்டெல்லாமேரி, அன்னபாக்கியம் என்றால் அவள் சொல்லி, கைதட்டலையும் வாங்கிக் கொண்டிருக்க முடியும்.

அவள் வா ய் தி றக் க யோசிப்பதற்குள் அவர், “என்னம்மா, தமிழரசி?’ என்று பேச்சை மீண்டும் ஆரம் பித்தார். பால் வெண்ணிற்றுக் கோடுகள் எடுப்பாகச் சுருங்கின. . - *

‘உண்மைதானுங்க, ஐயா!’ என்று அவரை நேராகப் பார்த்து ஆமோதிப்புக் கொடுத்தாள். -

அவர் பார்வை தாழ்ந்திருந்தது. பிறகு, அது பக்க

வாட்டில் திரும்பியது. ‘இவள்தான் என் சம்சாரம்’ என்று அறிமுகப் படுத்தினர். அவர் நன்றிப் பெருக்குடன் தம் துணையைப் பார்த்தபடியே சொன்னர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/221&oldid=664035" இலிருந்து மீள்விக்கப்பட்டது