பக்கம்:தாய் மண்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

“எல்லாவற்றையும் வந்தவுடனேயே தெரிஞ்சுக்கிட் டேன்’ என்றாள் அவள்.

அவர் தனித்துக் கிடந்த சோபாவில் சாய்ந்தார். “உட்காருங்க’ என்றார். பூபாலன் கையில் வைத்திருந்த பிஸ்கட் கலர் சில்க் ஜிப்பாவை வாங்கி உதறினர். இஸ்திரி’ போடப்பட்டிருந்த மடிப்புக்குள் கலந்தன. அவர் அணிந்து கொண்டார். கழுத்துச் சங்கிலியின் அடியில் தொங்கியது பதக்கம். பதக்கத்தைக் காத்த நரிப்பற்கள் இரண்டும் கவர்ச்சியுடள் மிளிர்ந்தன. இது என் சன்!’

தெரியும்; தம்பி பேர் பூபாலன்!” என்று மெளனமாக நகை புரிந்தாள், தமிழரசி,

அவள் பேச்சைக் கேட்டதும், அவரது கரிய பெரிய கண்கள் மீண்டும் பெரிதாயின. ‘தம்பி’ என்று சுட்டிய அவளது உறவுச் சொல்தான். அவரது அதிசயத்துக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். நடப்பும் அதுதான். அவர்தம் மனைவியைத் தேடினர். சிவகாமி வந்தாள். வாடைக்காற்று அதிகரித்தது. காற்றுப் படாமல் பட்டை இழுத்து விட்டுக் கொண்டாள்.

‘டி.பன், ரெடிங்க!” சிவகாமியின் அன்பில் தமிழரசியின் பூங்கரங்கள் கட்டுண்டன. வீட்டில் இடியாப்பம் சுட்டுச் சாப்பிட்டேன்’ என்று அவள் சொல்லி விட்டால் மட்டும் போதுமா?

உணவுக் கூடம் மேற்குத் திசை நாகரிகப் போக்கில் அமைந்திருந்தது. சொக்கநாதனும் பூபாலனும் ஒரு வரிசை யாக அமர்ந்தார்கள். எதிர்ப் புறத்தில் தமிழரசி, சமையற் காரி எடுத்துக் கொடுக்க, சிவகாமி எடுத்து வைத்துப் பரி மாறினுள். . - “நீங்களும் உட் கார்ந்து காப்பிடுங்க!’ என்று சிவகாமியை வேண்டினுள், தமிழரசி. -

“மேஜை, நாற்காலி, தட்டு முதலான ஆடம்பரங்களைப் பார்த்திட்டு, என்னைச் சாப்பிட அழைக்கிறீங்களா? உங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/222&oldid=664036" இலிருந்து மீள்விக்கப்பட்டது