பக்கம்:தாய் மண்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

ளுக்குப் புரியாதா, புருஷன் சாப்பிட்டு முடிஞ்சுதானே பெண்சாதி சாப்பிட வேணும்?... நீங்க விருந்தாளி. நீங்க சாப்பிடுங்க! எனக்கென்ன, மெதுவாச் சாப்பிடுவேன்!...” என்றாள் சிவகாமி. அவள் தமிழரசியின் தட்டில் கொஞ்சம் புதின துகையலே எடுத்து வைத்து விட்டு, பூபாலன் பக்கம் திரும்பிலுள். அவனுக்குக் காண்டியினுல் மிளகாய்ப் பொடி எடுத்து வைத்தாள். சொக்கநாதனைக் கவனித்தாள். தோசை வைத்தாள்; நெய் ஊற்றினுள். அவர் போட்டுக் கொண்டிருந்த ஜிப்பாவின் இடது தோள் பட்டையில் ஒரு கிழிசல் இருந்தது. அவரிடம் ஜாடை காட்டின்ை அவள்.

உயிர் இனே சுட்டிய இடத்தைக் குனிந்து பார்த்த சொக்கநாதன் ஆண்மைச் செறிவுடன் சிரிப்பை உமிழ்ந்தார். “கிழிசல் சட்டை எனக்கு ஒண்னும் புதிசில்லை, சிவகாமி’ என்று நறுக்குத் தெறித்த மாதிரி விடை சொன்னர்.

தமிழரசிக்கு அவரது வெள்ளைப் பேச்சு பிடித்திருந்தது. அவர் உருவாக்க முயன்று கொண்டிருந்த யதார்த்த நடப் பைப் பற்றி அவள் சிந்திக்கச் சிந்திக்க, அவரைப்பற்றி அவள் செவிமடுத்த விஷயங்களை எல்லாம் பொய்க் கதையாகவே மதிக்கத் துடித்தாள் அவள். உண்மையை நெருங்க நெருங்க, பொய் விலகி விலகிப் போய்க் கொண்டிருப்பதாகவும் அவளால் கண்டு கொள்ள முடிந்தது, அந்த ஒரு நினைவு அல்லது முடிவு அவளுக்கு மிதந்த ஆரோக்கியத்தையும் ஊட்டத்தையும் கொடுத்தது. அவரைப்பற்றி முடிவிஅவளது மனிதாபிமானப் பண்பு அவசரப்பட்டது. சோதித்துப் பழகியவள் அல்லவா அவள்?--ஆகவே, அவள் நிதானமாகப் பார்வையை இழையச் செய்தாள்.

காபி குடித்தாள்: கை அலம்பினுள். முன்பிருந்த வர வேற்புக் கூடத்தை அடைந்தாள், தமிழரசி,

கை துடைத்த டவலே அங்கிருந்த கொக்கியில் மாட்டினர். “தமிழரசியும் நானும் கொஞ்ச நேரம் மாடியிலே பேச வேணும். நீ கீழே உன் காலேஜ் பாடங்களைப் படிச்சுக்கிட்டு இரு. நம்ம மானேஜர் போன் பேசினால், எனக்குக் கனெக்ஷன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/223&oldid=664037" இலிருந்து மீள்விக்கப்பட்டது