பக்கம்:தாய் மண்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

கொடு. மத்தியானம் தமிழரசி அக்காவுக்கு இங்கேதான் சாப்பாடு. சின்னம்மாவுக்குத் தெரியும். எதுக்கும் நீயும் ஞாபகப்படுத்திடு’ என்று மகனிடம் சொன்னர். ‘வாங்க, மேலே போகலாம்’ என்றார், தமிழரசியைப் பார்த்து.

தன்னுடைய பெற்றாேர்களைப பற்றிய விருத்தாந்தங்கள் ஏதாவது இந்த நல்ல மனிதர் வாயிலாகக் கிட்டச் செய்ய வேண்டுமென்று படைத்தவனைப் பிரார்த்தனை செய்தவளாக, சொக்கநாதனத் தொடர்ந்தாள் தமிழரசி,

மாடி வந்தது.

பூஜை அறையை அடுத்து இருந்தது, பெரிய அறை ஒன்று. அதுதான் அவரது தனியறை. மையத்தில் இருந்த உயர்ந்த முக்காலியின் மீது, வாலே முறுக்கிக்கொண்டு, திமிர் கொழித்துப் பாயத் துடித்த கறுப்புக்காளை ஒன்றின் பொம்மை இருந்தது. ஜப்பான் நாட்டின் கலாசாரம் பிரதிபலித்தது.

“உட்காருங்க,’ என்றார் அவர். அவள் உட்காருவதை அறிந்து அவர் உட்கார்ந்தார். அவள் சேலைக்கரைப் பகுதியை ஒழுங்கு செய்து கொண்டு விற்றிருந்தாள். மீண்டும் அந்தக் காளைப் பொம்மை அவளது பார்வைக்குக் குறி ஆனது. இந்த இடத்தில் - ஒரு நல்ல உள்ளத்துக்குரிய இந்த இடத்தில் இம்மாதிரி ஒரு பொம்மை இருப்பது விநோதமாகவும், செயற்கையாகவும் அவளுக்குத் தோன்றலாயின. அந்தக் காளையை இமைக்காமல் பார்த்தி ருந்த அவள் எதையோ ஒன்றை மனக்குழியிலிருந்து தோண்டி எடுக்கப் பிரயத்தனப்பட்டாள். நினைவு வந்தது.

சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்தில் இருக்கும்போது, ஒரு நாள் ஆங்கிலேய நண்பர் ஒருவருடனும், மிஸ் முல்லர் என்ற தன் சிஷ்யையுடனும் உலவிக் கொண்டிருந்தார். அப்போது, வெறி கொண்ட பெரிய காளை ஒன்று அவர்களை நோக்கி ஆவேசமாகப் பாய்ந்து வந்தது. நண்பர் தப்பித்தார். ஆளுல், ஆங்கிலப் பெண்மணி பயந்து தரையைச் சார்ந்தாள், காளையோ அவளைப் பாய்ந்து விடவேண்டும் என்ற வெறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/224&oldid=664038" இலிருந்து மீள்விக்கப்பட்டது