பக்கம்:தாய் மண்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

புடன் நெருங்கிவிட்டது. உடனே, சுவாமிஜி மாட்டுக்கும் பெண்ணுக்கும் இடையில் நின்றுகொண்டார். தம் உயிர் போனுல் பரவாயில்லை; அந்தப் பெண் உயிர் தப்பினுல் போதும் என்ற தியாக உணர்வுடன் அவர் காளையின் திசை நோக்கிக் கும்பிட்டு நின்றார். அப்போதுதான் அந்த அதிசயம் விளைந்தது. வெறி மூள ஓடி வந்த அந்தக் கறுப்புக் காளே, சுவாமிஜியை ஏறிட்டுப் பார்த்ததும், வெறி அடங்கி உடனே திரும்பிவிட்டதாம்!...

தத்ரூபமாகக் காட்சி தந்த அந்தக் காளே, ஒரு கதையைஒரு நடப்பு உண்மையைச் சித்திரித்தது.

சொக்கநாதன் லேசாகக் கனைத்துக் கொண்டார். “அப்புறம் என்னம்மா விசேஷம்?’ என்று கேட்கலாஞர்.

அவளோ, பேச்சை எப்படித் தொடங்குவது என்று விளங் காமல் பிரமை தட்டிக் காணப்பட்டாள்.

“அந்த ராணுவ வீரருக்கு நீங்கள் செஞ்ச மரியாதை ரொம்பவும் நியாயமானது. வீரத்தைப் போற்றிப் பழக்கப் பட்டது நம் நாடு. இல்லீங்களா?- அதேைலதான், உங்க மனமும் அப்படிப் பக்குவப்பட்டிருக்குது!...” என்றார் அவர்.

அவள் மெளனத்தைக் கடைப்பிடித்தவாறு, குனிந்திருந்த தலையை மேலே உயர்த்தினள். “அன்றைக்கு நீங்க அந்த ஜவானைப் பார்க்க வந்திருந்தது எனக்குத் தெரியலே. தெரிஞ் சிருந்தால், உங்களை என் வீட்டுக்கு அழைச்சிருப்பேன்” என்றாள். அவரை வரவேற்கும் வாய்ப்பை இழந்த துயரத்தை. அவளது கண்டத் தொனி காண்பித்தது. . . . . “அந்த வழியிலே வந்த எனக்கு அப்படியே உங்களையும் பார்த்திட்டுத் திரும்பத்தான் ஆசை. ஆனல்...?

அவள் பதட்டத்துடன் அவரை நிமிர்ந்து நோக்கிளுள். ‘இரவுப் பொழுதிலே நான் உங்களைத் தேடி வந்தால், பார்க்கிறவுங்க உங்களைத் தப்பாக நினைப்பாங்களோ என்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/225&oldid=664039" இலிருந்து மீள்விக்கப்பட்டது