பக்கம்:தாய் மண்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

பயம் என்னை ஆட்டி வச்சிட்டுது. என்னலே உங்களுக்கு அக்கம் பக்கத்திலே ஏதாச்சும் அவதூறு கிளம்பிடுமோ என்கிற நடுக்கம் என்னைத் தடுத்திடுச்சு!...”

மேலே விசிறி சுற்றியது.

ஆனல், தமிழரசிக்கோ வேர்வை கட்டு மீறியது. உணர்ச்சி நரம்புகள் புடைத்தெழுந்தன. அவளது நயனங் கள் கண்ணிரைத் திரட்டின. “ஐயா!...” என்று தடு மாறிஞள்.

‘அம்மா தமிழரசி! என்னைப் பற்றி உங்களுக்குத் தெரி யாது. இப்போதுதான் நான் மனிதனுக மாறி வந்துக்கிட்டி ருக்கேனம்மா! ஆனல் நான் மாஜி மிருகமாக இருந்த உண்மை யின் ஞாபகத்தை என்னுலேயும் மறக்க முடியாது; உலகத்தா லேயும் மறக்க முடியாது! அதாலேதான், - அந்தப் பழைய பயத்தினுலேதான் அன்றைக்கு உங்களைப் பார்க்காமல் திரும் பிட்டேனம்மா!”

சொக்கநாதனுக்குத் தொடர்பைப் பிடித்துப் பேசத் தெரியாவிட்டாலும் தொடர்பைப் பிடித்து விழி நீரைக் கொட்டத் தெரிந்திருந்தது!

மனப் பொன்னை மனச்சான்றின் தீயில் புடம்போட்டு எடுத்து உரைத்துப் பார்த்து, உரைத்த சொற்கள் போலும் அவை:

சொக்கநாதனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கத் தெம் பிழந்து, மனம் கலங்கி கண் கலங்கி அப்படியே பதுமையாக, உருமாறிக் கொண்டிருந்தாள் தமிழரசி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/226&oldid=664040" இலிருந்து மீள்விக்கப்பட்டது