பக்கம்:தாய் மண்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டி மறைப்பவன்!

இருபத்தேழு

திருவாளர் சொக்கநாதனின் உருக்காட்டுப் படலத்தைக் கண்டு, உணர்ந்து, மனம் நெகிழ்ந்தாள் தமிழரசி, விழிகள் பீலி வளையல்களாகிக் கண்ணிரைச் சொரியத் தலைப்பட்டன. எதிர்ப்புறத்தில் மோனத்தின் சுழிப்பில் ஒன்றியிருந்த அந்தச் செல்வச் சீமானின் தேம்பல் ஒலிகளைக் கண்டதும், அவள் மனம் மேலும் பொங்கியது. வாழ்க்கை பொய்யென்று பொய்க் கணக்கிட்டுக்கொண்டு, பொய்யான போலி வாழ்வு வாழும் கணக்கிலடங்காத மனிதர்களுக்கு மத்தியில், வாழ்க்கை நிஜம் என்று அறிந்து, தம் தவறுகளைச் செப்ப னிட்டுக் கொண்டு திருந்தி புதிய மனிதராக உருக்கொண் டிருந்த சொக்கநாதனின் உயர்ந்த பண்பை மனத்துக்குள் ளாகவே போற்றி வழிபட்டாள் அவள்! .

அவரை அந்தத் துயர்மிகு சூழலில் மேலும் சோதித்துத் தட்டிப் பார்க்க அவள் விழையவில்லை. “ஐயா!... நீங்க பெரியவங்க. உங்களுக்குத் தெரியாததில்லை. உலகத்திலே யாருமே எப்போதுமே நல்லவர்களாக இருந்ததாகச் சரித்திரமே கிடையாதுங்க. தவிர்க்க முடியாத மாயப்பிர பஞ்ச வாழ்க்கையிலே, தவிர்க்க முடியாத சோதனை என்கிற விபத்துக்களை நாம் சந்தித்துத்தானே ஆகவேணும்...? உங்க பேச்சும் செயலும் ஒரே அதிசயமாத்தான் இருக்குது நீங்க ஒரு அதிசய மனிதராகவே என் கண்களுக்குத் தெரியுறீங்க... இதே பார்வை எல்லாருக்கும் வராமல் தப்பாதுங்க: தப்பவும் இயலாதுங்க, ஐயா!... அவள் இவ்வளவு கூடுதலான அழுத் தத்துடன் உண்மையைத் தெளிந்து சொன்னது அவளுக்குத் திருப்தியாகவே இருந்தது மாத்திரம் பெரிதல்ல; அவருக்கும் திருப்தி நல்கியதென்பதை அவள் கண்டு கொண்டதுதான் பெரிதாகத் தோன்றியது. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/227&oldid=664041" இலிருந்து மீள்விக்கப்பட்டது