பக்கம்:தாய் மண்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

அந்தச் சூழலுக்குப் புதிய திருப்பம் உண்டாக்கவேண்டு மென்று தமிழரசி அவசரப்படலானள். ஆகவே, எழுந்தாள். ரேடியோகிராமை நாடினுள் இயக்கினுள். புதிய வானத் தையும் புதிய பூமி'யையும் பாடிக் காட்டிக் கொண்டிருந்தது அது. அமைதி :ையப் பைய அவளை அண்டி வந்து கொண்டிருந்தது.

பாட்டு முடிந்தது.

ஆனல், அவள் பிரச்னை மட்டும் தீர்வு காட்டாமலே இருந்தது. ‘என்னைப் பெற்றவர்களைப்பற்றின சிக்கலுக்கு நான் மண்ணில் கண்மூடும் வரைகூட ஒரு விடிவு கிடைக்காது போலிருக்கிறதே! என்று வருந்தினுள். அந்த வருத்தத்தின் உந்துதலில், அவள் வந்த நோக்கம் அவள் தொண்டைக் குழியில் சொற்களாக வடிவெடுக்க முனைந்தது.

அதே கணத்தில், அவளது இதயச் சலனத்தைக் கணித்துக் கொண்டவர் மாதிரி அவராகவே பேச்சைத் தூக்கி ஞர். அப்பாலே, என்னம்மா விசேஷம்?’ என்று விசாரித் தார். அதைத் தொடர்ந்து, “அம்மா தமிழரசி ! உங்க மேலே நம்ம மதர் திலகவதி அம்மையாருக்கு ஏதேஷ்டமான பாசம். தான் பெற்ற பெண்ணைப் போலவே அவர்கள் உங்களை நினைச்சிருக்காங்க. நாங்க சந்திக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் ஒரு வாட்டியாகிலும் உங்களைப்பற்றிப் பேசாமல் இருந்ததே கிடையாதாக்கும்... அம்மம்மா!... நீங்க பச்சைக் குழந்தையாயிருக்கிறப்ப, உங்களை வளர்க்கிற துக்கு அவர்கள் பட்ட சிரமம் கொஞ்சமா, நஞ்சமா? அவங் களைப் போல ஒரு தியாகப் பிறப்பை நாம் இந்த ஜன்மத் திலே தரிசிக்கவே முடியாதம்மா!... அடடே!... மதரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? ஆனலும், என் மனசுக்கு, அவங்களோட உண்மையான சேவையைப் பற்றிப் பேசுகிற திலே ஒரு ஆறுதல் கிடைக்கும். அதுக்காகத்தான் நானும் என் வாயாலே நாலு வார்த்தை அந்தத் தலைவியைப் பற்றிச் சொன்னேன்!...’ என்று முடித்தார். பிறகு, மறுபடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/228&oldid=664042" இலிருந்து மீள்விக்கப்பட்டது