பக்கம்:தாய் மண்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229

அவளைப் பார்த்தார், “சரியம்மா வேறே விசேஷம் என்ன?” என்று மீளவும் கேட்கலானர்.

தியாகத்தின் உருவான திலகவதி அன்னேயின் நினைவாட். டத்திலேயே ஆலவட்டம் கற்றிக் கொண்டிருத்தாள்,தமிழரசி, சொக்கநாதனின் விசாரிப்புக் குரல் அவள் கண்களைத் திறக்கச் செய்தது. தான் பெற்ற பெண்ணேப் போலவே அவர்கள் உங்களை நினைச்சிருக்காங்க!” என்று இல்லத் தலைவியைப்பற்றி அவர் சொன்ன வாசகத்தின் பாசத் திளைப்பிலிருந்து விடுபட்டு மீள முடியாமல் தவித்தாள். வினாடிகளின் ஒட்டத்தில் அவள் மெள்ள மெள்ளத் தன்னுணர்வு அடைந்தாள். “ஐயா! எனக்குத் தாயும் தந்தையும் அவங்கதான்! அவங்க என் பேரிலே வச்சிருக்கிற அன்புக்கும் பாசத்துக்கும் நான் ஏழேழு பிறப்புக்கும் அவர்களுக்குக் கடமைப்பட்டவள் ஐயா! ... என்னைப் பெற்றவங்களைப் பற்றி யாதொரு விவரமும் தெரிஞ்சுக்க முடியாத பாவியாக நான் ஆகிட் டாலும், மதரோட உருவத்திலே தானுங்க நான் எனக்குரிய தாயையும் தந்தையையும் தரிசிச்சுக்கிட்டிருக்கேன்!...” என்றாள் அவள். கைக்குட்டைக்கு வேலை கிடைத்தது.

‘உண்மைதானம்மா, உண்மைதான்!”

தமிழரசி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு சொக்க நாதனை ஏறிட்டுப் பார்த்தாள். குத்து விளக்கின் எரிதிரியி லிருந்து தெறிந்து விழும் சுடராக ஒரு பழைய ஞாபகம் அவளுள் தோன்றியது. ஒரு சமயம், அவள் இல்லத்திற்குச் சென்றிருந்த போது, தலைவியும் சொக்கநாதனும் கூடத்தை வந்தடைய, அவர்கள் இருவருக்கும் மத்தியில் தான் நின்ற காட்சியைப் பிரதிபலித்துக் காட்டிய நிலைக் கண்ணுடியில் அக்கணம் தெரிந்த அம் மூன்று முகவிலாசங்களின் அமைப் பைச் சந்தித்த சடுதியில், தன்னையும் அறியாத வகையில், இனம் விளங்காத ஏதோ வகைப் பாசம் தன்னுள்ளே முகிழ்த்துப் பரவிய விந்தையை இப்பொழும் அவள் நினைத்துக் கொண்டாள். அந்தச் சிலிர்ப்பினுாடாக அவள் கனி இதழ். வாய் திறந்தாள்: “ஐயா! என்னேட பிறப்புப்பற்றி உங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/229&oldid=664043" இலிருந்து மீள்விக்கப்பட்டது