பக்கம்:தாய் மண்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

சிந்தனைக்குள் அடக்கினுள்? நிகழ்காலத்தை நினைத்தாள். அந்நினேவில் நெடுமூச்சு புறப்பட்டது; புறப்பட்ட சிந்தனேயும் அதற்கு ஏதுவாக அடித்தளம் பரப்பிய சித்தமும் நீண்டு வளர்ந்தன. தொடரும் என்ற குறிப்பும் இருந்தது. நடப்புக் காலத்தின் நிலை அவளுக்குப் பிடிபடாத புதிராகத் தோன்றியது போலவே, எதிர்காலத்தின் கதையும் அவளது கன்னி மனத்தில் ஒரு மர்மமாகவே தோன்றியது, காலத்தின் முப்பிரிவுகள் அவ

வளை எங்கெல்லாமோ- எப்படியெல்லாமோ மளுேரதப் பயணம் செய்யத் துாண்டிவிட்டன. இன்பம், ஏக்கம், பெருமை, பாசம், வைராக்கியம், துயரம் போன்ற மனவுணர்களின் பலதரப்பட்ட பருவ மாறுதல்கள் அவளே ஆட்டிப் படைத்தன போலும்!

கடமையின் தினேவு அவளே அரித்தது. மேஜை இழுப் பைத் திறந்தாள். உள்ளே இருந்த மணிமேகலை’யைப் புரட்டினுள். உறை கிழிக்கப்பட்டிருந்த உறையை உதறி ஞள். உறை வேறு, உறைக் கடிதம் வேருகச் சிதறிவிழுந் தன. கடிதம் அவள் கைக்குள் அடங்கியது, கடிதத்தின் உள்ளடக்கம் ஏற்கனவே அவளுக்குப் பழக்கப் பட்டதுதான். இருந்தாலும், மீண்டும் படித்தாள்: எங்கிருந்தோ மிதந்து வந்த இனிய சோகத்தின் பின்னணியுடன் அவள் அக்கடிதத் தைப் படித்தாள்: - -

‘அன்பிற்குரிய குமாரி தமிழரசி அவர்களுக்கு,

நலம். நலம் எழுதுங்கள். நான் தங்களைச் சந்தித்த வேளே ஒரு பொன்னுை சந்தர்ப்பமாகவே இருக்கவேண்டும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள்தாம் ஒவ்வொருவருக்கும் வாழ்வின் திரும்பு முனைகளை உண்டாக்கி வாழ்த்துகின்றன. அப்படிப்பட்ட நாகரிகமானதோர் அன்பின் வாழ்த் தாகவே நம் சந்திப்பைக் கருதி, இக்கடிதத்தை வரை யவும் ஆரம்பித்தேன்.

விட்டகுறை-தொட்டகுறை என்பது பிறப்புக் களின் சங்கிலித் தொடர்பானதொரு முடியாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/23&oldid=664044" இலிருந்து மீள்விக்கப்பட்டது