பக்கம்:தாய் மண்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

ளுக்கு ஏதாவது விவரம் தெரியுங்களா?... என்னைப் பெற்ற தாய்-தந்தையைப் பற்றின ரகசியம் ஏதாவது உங்களுக்குப் புரியுங்களா?’ என்று சோகத்தின் உச்சத்தில் அமர்ந்து கேட்டாள். -

அவள் கேட்ட கேள்வியைச் செவிமடுத்தது தான் தாமதம், சொக்கநாதன் ஒரு கணம் அப்படியே சிலையாய் மலைத்துப் போனர். சோபாவில் சாய்த்திருந்த முதுகை நிமிர்த்திக் கொண்டார். தமிழரசியைப் பட்சத்துடன் பார் வையிட்டார். “தமிழரசி!... அம்மா, தமிழரசி!... அதைப் பத்தி எனக்கு எப்படியம்மா தெரிஞ்சிருக்க முடியும்...?’’ என்று பேச முடியாமல் திணறினர்.

ஆயாள் முன்னர் சொன்ன விஷயங்களை அவள் ஞாபகம் செய்தாள். பிறகு, தொடரவேண்டியவள் ஆளுள், ‘நான் பச்சைக் குழந்தையாய் இருக்கிறப்ப ஏதோ ஒரு ஆஸ்பத்திரி யிலேருந்து என்னை நீங்கதான் கொண்டு வந்து மதர்கிட்டே இல்லத்திலே கொடுத்தீங்களாமே?...”

புருவங்களில் துளிர்த்திருந்த முத்துக்களை விரலால் ஒதுக்கினர் சொக்கநாதன். “ஆமாம்மா! உண்மைதான்! நான்தான் உன்னைப் பச்சை மண் மாருமல் கொண்டு வந்து ம த ரி ட ம் சமர்ப்பித்தேன்!... பம்பாயிலிருந்து மதர் திரும்பி வந்து, இந்த இல்லத்தோட பொறுப்பை ஏற்றுக்கிட்டுக் கொஞ்ச நாளேதான் ஆகியிருந்த நேரம் அது. எனக்கு வேண்டப்பட்ட நர்ஸிங் ஹோமிலே அஞதைக் குழந்தை ஒண்னு இருக்கிறதாகச் சொன்னங்க. அப்பவே நான் திலகவதி அம்மாவுக்குப் போன் செஞ்சேன். உடனே, கொண்டு வரும்படி சொன்னங்க. கொண்டு போய்க் கொடுத் தேன். மற்றப்படி வேறே எதுவும் உன்னைப்பற்றி அந்த நர்விங் ஹோமிலே சொல்லவும் இல்லே; எனக்கும் வேறே எதுவும் தெரியாதேயம்மா! இதுபற்றி மதருக்கும் தெரிஞ் சிருக்க நியாயமில்லை. தெரிஞ்சிருந்தால் கட்டாயம் உன் கிட்டே சொல்லாமல் இருக்கவே மாட்டாங்களே!... உங்களு டைய துர்ப்பாக்கியமான நிலைமையை நினைச்சுப் பார்த்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/230&oldid=664045" இலிருந்து மீள்விக்கப்பட்டது