பக்கம்:தாய் மண்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23}

அப்பப்பா, எனக்கு நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு தம்மா!...” அவர் சொல்லி முடித்து, தமிழரசியை நோக்கினர்.

தமிழரசி மனவொடுக்கம் சித்திக்கப் பெற்றவள் போல அப்படியே சலனமற்று உட்கார்ந்திருந்தாள்!

மனத்தவிப்பைப் பெருமூச்சாகக் கழித்தவாறு அவர் காணப்பட்டார். பிறகு, அருகிருந்த மேஜை இழுப்பை இருந்த வசத்திலிருந்தபடியே திறந்து சுருட்டு ஒன்றை எடுத்துக் கொளுத்தினர். பர்மிய நாட்டுச் சுருட்டு இங்கே புகைக்க வேண்மென்று அதன் மண்டையில் விதித்திருக் கிறது:

கால் மேல் கால் போட்டபடி, சாய்ந்திருந்தார், சொக்க நாதன். ஜிப்பாவின் பொத்தான்களை எடுத்துவிட்டார். உச்சிக் காற்று இதமாகப் படர்ந்தது. சுருட்டின் சுகந்தம் அவரைச் சுற்றியது.

தமிழரசிக்கு அங்கே இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து நின்றாள். மேஜைக்கு நடந்தாள். ஆங்கில ஏடு ஒன்று இருந்தது. இவ்வாண்டு இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மைக்கேல் ஷோலோகோவைப் பற்றிப் படமும் குறிப்பும் வெளியாகியிருந்தன. அவள் அதைப் படித்துக் கொண்டே வந்தாள். டயரியைப் புரட்டி யதும் பழைய நிகழ்வை மீண்டும் நினைவூட்டிக் கொள்வதைப் போல, அன்றாெரு நாள் திடீரென்று சந்தித்து,பின் திடீரென்று ஒடிவிட்ட அந்த அபலைத் தாயைப் பற்றிய எண்ணம் அவளது அடிமனத்தில் வெளிச்சம் காட்டித் தோன்றியது. உடனே, மேற்படி சம்பவத்தை மறுமுறையும் நினைவூட்டிக் கொண் டாள். உண்டு முடிந்ததும், அந்த அம்மணி தன் கன்னத்து மச்சத்தைத் தொட்டுப் பார்த்த விதம் அவளுக்கு அதிசயத்தை ஊட்டியது. மறுகணம், “ஐயையோ, தெய்வமே என் மக ஞக்கும் இதுபோலத்தானே இடது கன்னத்திலே ஒரு அழகான மச்சம் இருக்குமே! ஐயோ... என் மகளே ராசாத்தி!’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/231&oldid=664046" இலிருந்து மீள்விக்கப்பட்டது