பக்கம்:தாய் மண்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

பாசவெறியுடன் ஓலமிட்டுச் சிரித்து மறைந்த விந்தையும் அவள் மனத்தை உலுக்கி எடுத்தது. அன்று விடியும் வரை அவளுக்கு அந்த அபலேத் தாயைப் பற்றிய ஞாபகம்தான். ‘உண்மையாகவேதான் அந்த அம்மாளின் மகளுக்கும் என் மாதிரியே இடது கன்னத்திலே மச்சம் இருந்திரு எங்கே டோயிட்டுதாம் அந்த அம்மாளுடைய மகள்?... ஒரு வேளை, தீயவழியிலே குழந்தையைப் பெற்று, ஊருக்குப் பயந்து, அதை அைைதயாய் விட்டுட்டு ஒடிப்போய் விட் தாலே, அவளுக்கு இப்படிப் புத்தி தடுமாறிப் பைத்தியம் ஏற். பட்டிருக்குமோ? ஆமாம், அதுதான் நடப்பாக இருந்திருக்க வேண்டும்! இல்லாட்டி, பெற்ற மகள் தாயைவிட்டு எங்கே போயிருப்பாள்...? பாவம்’ என்று ஆலோசனை செய்தாள். புலரிப் பொழுதில் அவள் தன்னுள் பரிதாபமாக ஆசைப்பட்ட அந்த ஒரு நினைவையும் அவள் மறைக்க ஒப்பவில்லை. “பைத்தியம் பிடித்த இந்தத் தாயாவது என்னைத் தன் அருமை மகளாக உரிமை கொண்டாடியிருக்கலாகாதா? தெய்வமே!’ என்று எவ்வளவோ ஏங்கித் தவமிருந்தாள். ஆனால், விடிந்தது என்னவோ, பொழுது மாத்திரம்தான்!...

மேஜையடியிலிருந்து மீண்டும் நாற்காலியைச் சார்ந் தாள். அன்று ஆயாளுடன் பேசிக் கொண்டிருக்கும் நேரத் தில், அவள் சொன்ன வாக்குமூலத்திலிருந்து சொக்க நாதன் வாயிலாக ஏதாவது ஆறுதல் கிடைக்குமென்று ஆர்வத்தோடு நம்பிக்கை வைத்திருந்தாள். இன்று அந்த நம்பிக்கையும் தவிடு பொடியாகிவிட்டது.தன் பெற்றாேரைப் பற்றித்தனக்கு எதுவும் தெரியாது என்று இல்லத்தின் தலைவிதான் எப் போதோ சொல்லி விட்டார்களே! ஆண்டவனைக் காட்டி மறைப்பவன்’ என்பார்கள். அது எத்துணை மெய்யான சேதி!...” என்று தனக்குத் தானே வாய்விட்டுப் பேசிக் கொண்டாள் தமிழரசி,

சொக்கநாதன் அப்பேச்சைக் காதில் ஏந்திக் கொண்டு “என்னம்மா?” என்று திகிலுடன் வினவினர். . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/232&oldid=664047" இலிருந்து மீள்விக்கப்பட்டது