பக்கம்:தாய் மண்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

அப்போதுதான் அவளுக்குத் தன்னுடைய பேச்சின் தவிப்புப் புரிந்தது. “ஒண்ணுமில்லீங்க. என்னைப் பற்றி யோசித்தேன். ஆண்டவனைப் பற்றிப் பேசி விட்டேன். அவ்வளவுதான், ஐயா!’ என்றாள், ‘ஒரு நாள் இரவிலே, தன் அருமை மகளைத் தேடிக்கிட்டு யாரோ தாய் ஒருத்தி வந்தாள். அவளுக்கு வேண்டுமட்டும்; சோறு படைச்சேன். என் மச்சத்தைப் பார்த்திட்டு, தன் மகளுக்கும் இப்படியொரு மச்சம் இருப்பதாகச் சொன்னுள். சொல்லி முடிச்சதும், அழுகையிலே சிரிப்பைக் கலந்துவிட்டபடி, ஒடி மறைஞ் சிட்டாள், அந்த அன்னே. அந்தத் தாயாவது என்மீது சொந்தம் கொண்டாடமாட்டாளா என்றுகூட இந்தப் பைத்தியத்தின் பேதை நெஞ்சம் ஏங்கித் தவிச்சுதுங்க. இதை நினைச்சுப் பார்த்துக்கிட்டிருந்தேன்!... அவ்வளவு தான்!...” நெடுமூச்சுக்கள் இழைகோலம் பின்னின.

‘அம்மா, தமிழரசி! தெய்வம்தான் நமக்குத் தாய் தந்தை எல்லாம். உங்களுக்குப் புதிதாகவா நான் சொல்லித் தரப் போறேன்?... நீங்க இனிமேல் பழங் கவலைகளை மனசிலே எண்ணிக் குமையாதீங்க. மனத் துன்பம் உடம்பை அரிச்சுத் தின்றுவிடுமம்மா!... உங்ககிட்டே பேசிக்கிட்டிருக்கிற இத்தனை பொழுதும், எனக்கு எவ்வளவோ அமைதியாயிருக்குது!... இதே உணர்வை, உங்க மூலம் தானும் அனுபவிச்சதாக மதர் திலகவதிகூட ஒரு தரம் சொன்னது ஞாபகத்துக்கு வருது:... இங்கே நான் தவம் இருந்துகிட்டிருக்கேன், உங்க பேரிலே பாசம் சொரிய அங்கே மதர் திலகவதி இருக்காங்க, உங்க பேரிலே தன் உயிரையே சொரிந்து கொண்டு! இந்த ரெண்டு ஜீவன்களையும் சோதிச்சுப்பிடாதீங்க, தமிழரசி!” என்று நாத் தழுதழுக்கக் கெஞ்சிய சொக்கநாதன், தமிழரசியின் கைகளைப்பற்றித் தம் கண்களில் ஒற்றிக்கொண்டு விம்மினர்.

தன்னை மறந்து அழுதாள், தமிழரசி, பிறகு, அவள் தான் அவரைத் தேற்றவேண்டியவளாகவும் ஆனுள். “வாங்க சாப்பிடப் போகலாம்!... அதோ அம்மாவும் வந்தாச்சு!” என்றாள். “..

தா. ம. 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/233&oldid=664048" இலிருந்து மீள்விக்கப்பட்டது