பக்கம்:தாய் மண்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோஷம்

இருபத்தெட்டு

“ஐயா! நான் இனி அைைத இல்லீங்க!’ என்று நெஞ் சுணர்ந்து, நினைவு பிணைத்து, பேரமைதிப் பெருங்குரலில் சொல்லிப் பிரிந்து வந்தாள், தமிழரசி, அவள் சொன்ன அந்த இதயமொழி இன்னமும் அவளை அரவணைத்து மகிழ்ந்து கொண்டிருந்தது. பாசத்தின் சரித்திரம் இன்று நேற்று வந்ததல்ல!

ஒரு புறம் கிறிஸ்துமஸ் வியாபாரச் சுறுசுறுப்பும், மறு புறம், பொங்கல் விழாச் சந்தடியும் காணப்பட்டன.

உஸ்மான் சாலையைக் கடந்து, அவள் பஸ் நிலையத்தை அடைந்தபோது, அந்தி மாலே அழகுக் காட்டத் தொடங்கி யிருந்தது.

ஜார்ஜ் டவுனுக்குச் செல்லும் பஸ்ஸுக்காகக் காத்திருந் தாள், அவள்.

பிச்சைக்காரி ஒருத்தி தன்னுடைய ஏழு குழந்தைகளுடன் பிச்சை கேட்டு வலம் வந்தாள். “அலகிலா விளையாட்டின் ரகசியத்தை அறிவது சுலபமல்ல!” என்ற அபாய அறி விப்பைச் சுட்டாமல் சுட்டிக் கொண்டிருந்த பிச்சைத் தட்டில் அவள் போட்ட காசுகளும் இணைந்தன. பணக்காரப் பெரு மகன் ஒருவரிடம் வந்து அந்தக் குழந்தைகள் யாசகம் கேட்டனர். அந்தப் புண்ணியவான் அசைந்து கொடுக்க வில்லை. உடனே, பிள்ளைகள் பாட்டுப் பாடத் தொடங்கா மல் என்ன செய்வார்கள்? பாட்டு என்றால், கோஷ்டி கானப் பாட்டு. வந்தது வினை - யாருக்கு? - அந்தச் சீமானுக்கா? அல்ல! - அவரது சுருட்டுக்கு. அதை வீசி விட்டு, யானை ஓடுவது போல ஒடி விட்டார்!

தர்மமும் பிழைக்கவில்லை!

அந்த ஏழைச் செல்வங்களும் பிழைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/234&oldid=664049" இலிருந்து மீள்விக்கப்பட்டது