பக்கம்:தாய் மண்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

தாயும் மகளும் ஆருத் துயருடன் பார்வை தந்தனர். அவர்களைச் சுற்றி மறுகி மீண்டும் நெருங்கி, ‘அந்தப் பணக் காரரின் சார்பில்’ என்று மனத்திற்குள் நினத்துக்கொண்டே, இன்னெரு பத்துக் காசையும் கொடுத்தாள்.

அவள் வீட்டிலிருந்த பாங்குப் புத்தகத்தை எண்ணினுள். அதற்குப் புதிய பொருள் கொடுத்துவிட வேண்டுமென்று அவள் கொண்ட எண்ணம் வலுவடைந்து வந்தது. தாய் தாட்டு மண்ணேயும் தாய்நாட்டு அைைதகளையும் வாழ்த்தி வணங்கும் ஈரம் அவள் மனத்துக்கு எப்போதுமே உண்டு. “சிருஷ்டிப் புதிர் வேடிக்கைதான்! இதோ, அபரிமிதமான குழந்தைகளுடன் ஒர் ஏழைத் தாய்! மறுபக்கத்திலே, குழந்தைக்காகத் தவம் கிடக்கும் அபலைப் பெண்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்! அத்துடனுவது சிருஷ்டி, தன் புதிர் விளையாட்டை நிறுத்திக் கொள்கிறதா என்றால், அதுவும் இல்லை!... இன்னொரு நிலையைப் பார்த்தால், தாய் தந்தையற்ற அணுதைக் குழந்தைகள்!... எல்லாவற்றையும் கடந்து வேறுபுறம் பார்த்தால், குழந்தை குட்டிகளைப் பிரிந்து தவிக்கும் தாய் தந்தைமார்கள்! அந்தோ! வாழ்க்கை பயங்கரம்! பரிதாபம்!”

இன்னமும் பஸ் வரவில்லை.

ஆகவே, அவள் மனம் மங்கள பவனத்தில் போய் நின்றது. -

மதியச் சாப்பாட்டின் போது, சொக்கநாதன், அவரது மனைவி, அவர் மைந்தன் ஆகிய மூவரும் தன்மீது அக்கறை காட்டி, அன்பு காட்டி உபசாரம் செய்ததை அவள் வாழ் நாளிலே மறக்கவே இயலாது.

பாயசம் போட்டாள், சிவகாமி. ‘அம்மா, தமிழரசி! இவளை என்னல் மறக்கவே முடியாதம்மா: மனத் தர்மத்தின் பேரால் என் வாழ்வுக்கு ஒரு மறுமலர்ச்சி அளித்த புனிதவதி அம்மா இவள்!” என்று நினைவு தோய்ந்த நிலையில் அவர் தம் மனையாட்டியைப் பாராட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/235&oldid=664050" இலிருந்து மீள்விக்கப்பட்டது